உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு; மத்திய தொல்லியல் துறை அனுமதி

கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு; மத்திய தொல்லியல் துறை அனுமதி

கீழடி : சிவகங்கை மாவட்டம் கீழடியில், 11ம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கீழடியில் 2014 முதல் வைகை நதிக்கரை நாகரிகம் குறித்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வு, மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள், அதன் காலம், அதனை பற்றிய குறிப்புகளை மத்திய தொல்லியல் துறையின் காபா அமைப்பிடம் தமிழக தொல்லியல் துறை சமர்ப்பிக்க வேண்டும்.ஆய்வு செய்தபின் அடுத்தகட்ட அகழாய்வு நடத்த காபா அமைப்பு அனுமதி வழங்கும். 10ம் கட்ட அகழாய்வு பணிகள் தாமதமாக துவங்கியதால், 2025 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டன.திறந்தவெளி அருங்காட்சியக பணிகளும் நடந்ததால், 2025ல் அகழாய்வு பணிகள் நடைபெறவே இல்லை. 10ம் கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை, மத்திய அரசின் காபாவிடம் தமிழக தொல்லியல் துறை சமர்ப்பித்துவிட்டது.இதையடுத்து 11ம் கட்ட அகழாய்விற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறந்த பின், 11ம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

naranam
டிச 29, 2025 11:06

பணம் வேஸ்ட் டைம் வேஸ்ட்! ஆனால் இதில் தோண்டுபவர்களுக்கு வருமானம்..


Thravisham
டிச 29, 2025 08:27

பைசாவுக்கு ப்ரயோஜனம்மில்ல.


Kasimani Baskaran
டிச 29, 2025 04:33

மண் வெட்டி வைத்து வெட்டுவதெல்லாம் அகழ்வாராய்ச்சி கிடையாது.. ஆய்வறிக்கை தயார் செய்யும் பொழுது கோமாளிகளை வைத்து செய்யாமல் இருக்கவேண்டும். தமிழனின் நாகரீகம் மிக மிக தொன்மையானது. அதை 2000 வருடம் என்று சொல்வது மகா கேவலமான கோட்பாடு. பைபிள் 1800 வருட சரித்திரம் உள்ளது - அவர்களே இந்து என்ற வார்த்தையை உபயோகித்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அப்பொழுதுதான் சட்டி மண் பானை என்று உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.


RAJ
டிச 29, 2025 01:03

உன் பேரை மாத்திக்கோ