உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1,192 கோடியில் 12 புதிய சப் - ஸ்டேஷன்

ரூ.1,192 கோடியில் 12 புதிய சப் - ஸ்டேஷன்

சட்டசபையில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: இந்தாண்டில், 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை, தேவைக்கு ஏற்ப நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்துாத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக, 600 மெகா வாட் திறனில், அனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்திருவாரூர், மன்னார்குடி, திருச்சி மலைக்கோட்டை, கடலுார் சிதம்பரம், ராமநாதபுரம் திருஉத்திரகோசமங்கை, செங்கல்பட்டு திருவிடந்தை, திருச்சி சமயபுரம், விழுப்புரம் மேல்மலையனுார், தஞ்சை திருவிடைமருதுார், சிவகங்கை காளையார்கோவில் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் வீதிகள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செல்லும் மேல்நிலை மின் பாதைகள், 57 கோடி ரூபாயில் தரைக்கு அடியில் மாற்றி அமைக்கப்படும்கடலுார், நாகையில், 490 கோடி ரூபாயில் மேல்நிலை மின் பாதைகள், தரைக்கு அடியில் மாற்றி அமைக்கப்படும்மின் பகிர்மான கழகத்தில், 215 கோடி ரூபாயில், 33/11 கிலோ வோல்ட் திறனில், 18 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்தற்போதுள்ள, 26 துணை மின் நிலையங்களில், 'டிரான்ஸ்பார்மர்'களின் திறன், 55 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்துாத்துக்குடி, மேட்டூர், மேட்டூர் விரிவாக்கம், வட சென்னை, வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையங்களில் உள்ள பல்வேறு உபகரணங்களில், 500 கோடி ரூபாயில் மூலதன பணிகள் மேற்கொள்ளப்படும்ராமநாதபுரம், வழுதுார் எரிவாயு மின் நிலையத்தில், 111 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்மின் தொடரமைப்பு கழகத்தில், 1,192 கோடி ரூபாயில், 400 கி.வோ., திறனில் ஒன்று, 110 கி.வோ., திறனில், 11 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 94 கோடி ரூபாயில் தற்போது உள்ள, 110 கி.வோ., திறன் உடைய, 25 துணை மின் நிலையங்களில், டிரான்ஸ்பார்மர்களின் திறன் மேம்படுத்தப்படும்திறன்மிகு மின் கட்டமைப்பு செயல்பாட்டுக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தரவு பகுப்பாய்வுகளை மேற்கொள்ள, மின் பகிர்மான கழகம், சிறப்பு தரவு பகுப்பாய்வு பிரிவை உருவாக்கும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை