உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!

கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் சாலை விரிவாக்கத்துக்காக 1342 மரங்கள் வெட்டி அகற்றப்பட இருக்கின்றன.மேட்டுப்பாளையம் அவிநாசி இடையே உள்ள சாலை அகலப்படுத்தப்படுகிறது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சாலை விரிவாக்க பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக, சாலையோரத்தில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.https://www.youtube.com/embed/Wi2Kpk7RnMUஅதன் முக்கிய கட்டமாக, நரியம்பள்ளி-மேட்டுப்பாளையம் இடையே உள்ள 1342 மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. 146 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை அகற்றும் பணிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் இறங்கி உள்ளனர். தற்போது இந்த பகுதியில் உள்ள இருவழிச்சாலை 7 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கிறது. தற்போது, 16.2 மீட்டராக அகலப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நரியம்பள்ளி, மேட்டுப்பாளையம் இடையே சாலைகளை அகலப்படுத்தும் பணிக்காக 1342 மரங்களை அகற்றும் பணிகளில் இறங்கி இருக்கிறோம். இந்த 4 வழிச்சாலை 16.2 மீட்டர் அகலம் கொண்டது. இந்த சாலையில் நடுவில் தடுப்பும் அமைக்கப்பட உள்ளது. அத்திக்கடவு, அவிநாசி திட்டத்துக்காக போடப்பட்டுள்ள குழாய்களை அகற்றவும், அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சிட்டுக்குருவி
ஏப் 01, 2025 20:02

மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்ட கூடாது.வேண்டும் என்றால் ஒரு சாலையை விரிவாக்காமல் மரங்களுக்கு அப்பால் இன்னொரு இணையான சாலையை அமைக்கலாம். ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ 40 மரங்கள் தேவை என்ற ஒரு கணக்கீடு உள்ளது.மரங்கள் இல்லாமையே சீதோஷ்ண நிலை கடுமையாக மாறுவதற்கு காரணம்.மரங்களை காத்திடுவீர்.


J.Isaac
ஏப் 01, 2025 17:52

இந்தியா முழுவதும் இதே கொடுமை தானே என்று இதில் கருத்து எழுதுபவர்களுக்கு தெரியாதோ ?


ameen
ஏப் 01, 2025 15:53

மனுசனை கொன்றால் சட்ட ஒழுங்கு கெட்டுபோயிடுச்சு என்கிறிங்களே இதுவும் அந்த லிஸ்ட் ல போட்டு மரங்களை காப்பாற்றுங்கள்....அந்த 1000+ கணக்கான மரங்களை மறுபடியும் நம்மால் உருவாக்க பல வருசம் ஆகும்....இதற்கு ஒரு விடிவு இல்லையா


பெரிய ராசு
ஏப் 01, 2025 14:53

மரத்தை வெட்டும் நீங்கள் நாசமாக போகவேண்டும் . ஒருமரம் வெட்டுண்டு வீழ்வது போல அதை வெட்டும் கயவர்கள் வீழ்ந்து மடிவார்கள் கேடுகெட்டவர்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 01, 2025 14:48

என்னடா இது இந்த திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மொத்தமாக மரங்களை வெட்டவில்லை என்று பார்த்தேன். திமுகவின் தேர்தல் அறிக்கையில் எழுதப்படாத வாக்குறுதி மரங்களை வெட்டுவது. திமுக ஆட்சியில் மரங்கள் வெட்டாமல் இருந்தால் தான் ஆச்சரியம். செம்மொழி மாநாடு போது இரண்டாயிரத்துக்கும் அதிகமான 60 70 ஆண்டுகள் வளர்ந்த முதிர்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்து மாநாடு நடத்தியவர்கள். சாலையோர கோவில்கள் நூற்றுக்கணக்கில் இடித்து புண்ணியம் தேடி கொண்டவர்கள்.


Babu TD
ஏப் 01, 2025 14:47

சாலை ஓர மரங்கள் ஒரே வரிசையில் இருப்பதால் சாலை விரிவாக்கம் செய்யும்போது இருபுறமும் மரங்களை மெடியனாக வைத்து சாலை அமைக்கலாம்.


C.SRIRAM
ஏப் 01, 2025 14:04

மரங்களை அப்படியே பெயர்த்து வேறு இடத்தில் மாற்றி அமைக்கலாம்


C.SRIRAM
ஏப் 01, 2025 14:03

மரங்களை வெட்டி தான் சாலை விரிவாக்கம் என்றால் அது தேவையில்லை. வேறு வழியாக மாற்று அதை மிக முயற்சிக்கலாம். வெட்டப்பட இருக்கும் மரங்களுக்கு மாற்றாக அதே எண்ணிக்கையில் மரங்கள் நடப்படும் என்பதெல்லாம் கப்ஸா . நடை முறையில் எங்கும் ... எதிலும் ... ஊழல் என்பதே உண்மை


Ananthram
ஏப் 01, 2025 13:49

1. சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும்போது சாலையோர மரங்கள் நடுவதற்கும் சேர்த்து திட்டமிடல் வேண்டும். 2. சாலை விரிவாக்க கட்டுமான வரைபடத்திற்கான ஒப்புதலில் சாலையின் இருபுறமும் மரங்கள் காண்பிக்கப்பட வேண்டும். 3. இந்த ஒப்புதலை சம்மந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து/பேரூராட்சி நிர்வாகம் சரிபார்த்து பின்னர் ஒப்புதல் வழங்வேண்டும். 4. கட்டுமானம் ஆரம்பிக்கும் முன்னர் மரங்கள் நட்டு கட்டப்பட்ட வரைதல் ஒப்புதல் வாங்க வேண்டும். 5. கிராம பஞ்சாயத்து பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கட்டுமான ஒப்பந்ததாரரிடம் பாராபட்சம் பார்க்க கூடாது. 6. அந்தந்த பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள், சுற்றுப்பபுற சூழல் பசுமை ஆர்வலர்கள் மரங்களை நடுவதை உறுதி செய்திடல் வேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 01, 2025 14:50

நல்ல யோசனை. ஆனால் திராவிட கட்சிகள் ஆட்சியில் இதெல்லாம் நடக்கும் என்பது கனவு தான். சினிமா போல்.


Muralidharan S
ஏப் 01, 2025 13:41

என்றாவது ஒரு நாள், கடைசி மரம் உதிர்ந்த பிறகு, பணம், வாக்குகள், சாலைகள் ஆகியவற்றை உண்ணவோ சுவாசிக்கவோ முடியாது என்பதை அரசாங்கங்கள் இறுதியாக உணரும். ஆனால் அதுவரை - "முன்னேற்றம்" வாழ்க


முக்கிய வீடியோ