உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 135 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் தகவல்

135 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் தகவல்

சென்னை; நாட்டில் விற்பனையாகும் மருந்து, மாத்திரைகள் தரமானவையா என்பது குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர் ஆய்வுகளை செய்கிறது. தவிர, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதன்படி, கடந்த டிசம்பரில் 1,000க்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளி தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 135 மருந்துகள் தரமற்றவை என, கண்டறியப்பட்டுஉள்ளது. அந்த மருந்துகள் குறித்த விபரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் https://cdsco.gov.in/ என்ற இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram Moorthy
பிப் 07, 2025 08:40

திருட்டு மாஃபியா கும்பல் ஆட்சிக்கு வந்தால் போலி மருந்து பிரச்சனை காலவதி மருந்து பிரச்சனை அதிகரித்து விடும்


W W
பிப் 03, 2025 09:34

தரமற்ற மருந்து தயாரிக்கும் மருந்து கம்பெனிகளை பிளாக் லிஸ்ட் செய்து பல கோடி பேனலிட்டி அடித்து அவர்களின் லைசென்ஸை கேன்சல் செய்து தக்க தண்டனை அரபு நாடுகளின் வழங்கப்பட வேண்டும். இம்மருந்துகளை இன்ஸ்பெக்ட் கய் கூலி வாங்கி பாஸ் செய்த குவாலிட்டி கன்றோல் இன்ஸ்பெக்டர்ஸியையும் கூண்டில்எற்ற வேண்டும்.


பிரேம்ஜி
பிப் 03, 2025 08:29

என் மண்டைக்கு புரியவில்லை. ஏன் தரமில்லாத மருந்துகளைத் தயாரிக்க வேண்டும்? அதற்கு நல்ல தரமான மருந்துகளையே தயாரிக்கலாமே! போலி டாக்டர், போலி மருந்து, போலி போலீஸ், போலி நீதி, போலி வங்கி, போலி மந்திரி.....போலி ஓட்டு....போலி ஜனநாயகம்.......போலி மக்கள்........ போலி வாழ்க்கை! அசல் லஞ்சம், அசல் ஊழல், அசல் லஞ்சப் பணம்! வாழ்க வளமுடன்!


PR Makudeswaran
பிப் 03, 2025 09:52

தரமில்லாத மருந்துகள் தயாரிப்பு ஏன்? அதுதான் திராவிட மாடலின் முன்னோடி. குறைந்த முதலீடு நிறைந்த லாபம்


Apposthalan samlin
பிப் 03, 2025 10:47

70 சதவீதம் மருந்து மாத்திரைகள் மும்பையில் தயாராகிறது .


புதிய வீடியோ