மேலும் செய்திகள்
அரசு செயலாளர்களை வைத்து அரசியல்: இபிஎஸ் குற்றச்சாட்டு
4 hour(s) ago | 4
திருச்சி: ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு, திருச்சி வந்த 'ஏர் இந்தியா' விமான பயணியரை, திருச்சி விமான நிலையத்தில், சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது, பெண் பயணி ஒருவரும், ஆண் பயணி ஒருவரும் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து கொண்டதால், அதிகாரிகள் அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.அவர்கள் தங்கள் உடலில், 1.485 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம், 93.22 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
4 hour(s) ago | 4