உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இன்று(செப்., 29) இலங்கை கடற்படை கைது செய்தது.தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் 2 படகுகளில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவ குடும்ப மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாரம்பரிய மீன்பிடி பகுதிகளுக்கு மீன் பிடிக்கப் போகும் மீனவர் பிரச்னைக்கு, அடுத்த மாதம் கொழும்பில் நடக்கும் கூட்டுக்குழு கூட்டத்தில் தீர்வு காண வேண்டும். இலங்கை புதிய அதிபரிடமும் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழக மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதை தடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குரல் கொடுத்த மறுநாளே 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

NS நாயுடு
அக் 01, 2024 19:39

அத்து மீறி நாட்டின் எல்லையை கடந்தது நமது மீனவ திருடர்களா அல்லது இலங்கை கடற்படையா?


கௌதம்
செப் 29, 2024 16:49

திராவிட மாடல் குடும்பம் உங்கள் சும்மா விடாது... இலங்கை நாட்டோட பத்திரத்தை எடுத்து ஒளிச்சு வைச்சுக்க. அதை எப்படி வாங்கனும்ங்கிற வித்தை எங்க தத்திக்கு மட்டுமே தெரியும்... நாளைக்கு காலைல முதல் கையெழுத்தே இலங்கைய வாங்கி தமிழக மீனவர்கள் கிட்ட கொடுக்க போறார்


பாமரன்
செப் 29, 2024 14:42

பெட்ரோல் டீசல் விலை செய்தியுடன் இனி இந்த செய்தியை கூட இனைச்சிக்கிடலாம்... மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க எதுவும் இல்லை... காரணமாக வேனும்னா காங் நேரு அவுரங்கசீப் டீம்காதான்... சரிதானே பகோடாஸ் ஜிங் ஜிங் ச்சக்...


தமிழ்வேள்
செப் 29, 2024 11:56

தமிழக மீனவர்கள் கள்ள கடத்தலில் ஈடுபடுவதால் நியாயமாக இவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்.. இந்த மட்டிலும் உயிரோடு விட்டதற்கு ஸ்ரீ லங்கா அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும்....


NS நாயுடு
அக் 01, 2024 19:34

உண்மை..


Kumar Kumzi
செப் 29, 2024 11:56

செங்கல் வீரன் ஓங்கோல் சின்ன துண்டுசீட்டு முதல்வரகுரார் இனிமே அவர் பாத்துக்கொள்வர்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 29, 2024 10:15

இலங்கை மீனவர்களுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் அவர்கள் எல்லை எது என்று தெரிகிறது. நம் மீனவர்களுக்கு மட்டும் தெரியாது.


V RAMASWAMY
செப் 29, 2024 09:28

கச்சத்தீவை தாரையும் பார்த்துவிட்டு அங்கு மீன் பிடிக்கச்சென்றால் அனுபவிக்கவேண்டியதுதான்.


ஆரூர் ரங்
செப் 29, 2024 09:19

எவ்வளவு வேண்டுமானாலும் அத்துமீறி எல்லை தாண்டி மீன் திருடலாம் .மாட்டிக்கொண்டால் குரல் கொடுத்து அரசியல் ஆதாயம் தேட திராவிஷ கார்ப்பரேட் கட்சிகள் உண்டு .


Duruvesan
செப் 29, 2024 08:46

ஆக விடியல் கடிதம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 29, 2024 08:27

அது எப்படீங்க அத்துமீறல்? நம்ம மீனவர்கள் அத்துமீறி இலங்கை எல்லைக்குள் செல்வதுதான் அத்துமீறல். ஜி.பி.எஸ். கருவிகள் பயன்படுத்தும் மீனவர்களுக்கு எது இலங்கை எல்லை என்று தெரியாதா? வீம்புக்கும், வரம்பு மீறியும் எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்ய இலங்கை கடற்படை காவலர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. அவர்கள் எடுப்பது சட்டபூர்வ நடவடிக்கை. நமது பத்திரிகைகள் தவறாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் இலங்கை அட்டூழியம் என்று பரபரப்பு செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 29, 2024 11:09

என் மனதில் என்ன இருந்ததோ அதை அப்படியே சொல்லி விட்டீர்கள் PATS ....தமிழக மக்கள் ஒரு காலத்தில் உழைத்து சாப்பிட்டவர்கள்.... அவர்களை பிச்சை எடுக்க வைத்து , பேராசை பிடித்து அலைய வைத்து, சுயமாக யோசிக்க முடியாமல் புத்தியை மழுங்கடிக்கவைத்து, போதைக்கு அடிமையாக்கிய புண்ணியம் திராவிட கட்சிகளையும், தமிழக ஊடகங்களையும் மற்றும் பத்திரிகைகளையுமே சாரும் என்பது 1000% நிதர்சனமான உண்மை...!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை