மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago
சென்னை:தென்மேற்கு பருவமழைக் குறைவால் பாதிக்கப்பட்ட, 22,533 டெல்டா மாவட்ட குறுவை பயிர் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 16.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் குறைவு காரணமாக நெற்பயிர்கள் பாதித்தன.அப்போது, 33 சதவீதத்திற்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு, 13,500 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 16.85 கோடி ரூபாயை ஒதுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்தில், 17 விவசாயிகளுக்கு 2.37 லட்சம்; நாகப்பட்டினத்தில், 21,816 விவசாயிகளுக்கு, 16.37 கோடி; தஞ்சாவூரில், 77 விவசாயிகளுக்கு, 7.52 லட்சம்; திருவாரூரில், 623 விவசாயிகளுக்கு, 38.47 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
3 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
15 hour(s) ago