உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 17 மீனவர்கள் சென்னை வருகை

17 மீனவர்கள் சென்னை வருகை

சென்னை:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் 17 பேர், சென்னை திரும்பினர்.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் 29ம் தேதி கைது செய்தனர். இலங்கைக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அனைவரையும் சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்க, இலங்கை அரசுடன் இந்திய துாதரக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்களை சில தினங்களுக்கு முன் விடுதலை செய்தது. பின், அவர்கள் கொழும்பிலிருந்து விமானத்தில், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை