உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி விடுதியில் பயங்கர தீ: கென்யாவில் 17 பேர் பரிதாப பலி: 14 பேர் காயம்

பள்ளி விடுதியில் பயங்கர தீ: கென்யாவில் 17 பேர் பரிதாப பலி: 14 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நைரோபி: கென்யாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் பலத்த காயமுற்றனர்.ஆப்ரிக்க நாடான கென்யாவில் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.

பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்

எனினும் இந்த சம்பவத்தில் 17 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். 14 மாணவர்கள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைகிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தலைநகர் நைரோபியில் பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
செப் 06, 2024 13:37

மனம் வேதனைப்படுகிறது . அரிமா சங்கத்தின் சார்பாக உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து முடிந்த உதவிகளை கண்டிப்பாக செய்வார்கள், ஆனால் குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு நாம் எப்படி ஆறுதல் கூறமுடியும் . வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை