உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் 18 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 18 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.புதுக்கோட்டை மீனவர்கள் 18 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
டிச 03, 2024 12:34

புது புது பெயர்களில் உருவாகும் புயல்கள் கூட ஓய்ந்துவிடுகிறது. ஆனால் இந்த பழைய மீனவர்கள் பிரச்சினை ஓய்வதில்லையே. ஏன்? ஓய்ந்துவிட்டால், ஆட்சியாளர்களை மீனவ சமுதாயம் கொண்டுகொள்ளமாட்டார்கள். ஆகையால் ஆட்சியாளர்கள் இந்த மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவு காணவே மாட்டார்கள்.


Subba Rao
டிச 03, 2024 11:09

இடம் சீலோனுக்கு சொந்தம் என தெரிந்ததும் அங்கே போய் ஏன் மீன் பிடிக்க வேண்டும். இந்த நிலை மாறுமா ?


மீன்குமார்
டிச 03, 2024 08:56

நேத்திக்கிதான் மீன் பிடிக்க கிளம்பினாங்க. மீனெல்லாம் ஒருவேளை புயலுக்கு பயந்து இலங்கப் பக்கம் ஓடிருக்குமோ?


MARI KUMAR
டிச 03, 2024 08:42

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது


Thiagu
டிச 03, 2024 08:58

கச்சா தீவு அவஙகளுக்கு எழுதி குடுத்தாரு தலீவர், அப்பால புயலு சின்னம் போட்டு விடியல் சார் அங்க போவ வேணாம்னு சொன்னா எவன் கேட்கறீங்க, ஒன்றிய அரசு ஒயிக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை