உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  2022 முதல் 2025 வரை 18,028 கி.மீ., துாரம் ரயில் பாதை புதுப்பிப்பு

 2022 முதல் 2025 வரை 18,028 கி.மீ., துாரம் ரயில் பாதை புதுப்பிப்பு

சென்னை: நாடு முழுதும், 18,028 கி.மீ., துார ரயில் பாதைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

நாடு முழுதும், ஒரு லட்சத்து, 16,000 கி.மீ., துாரத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சில வழித்தடங்களில், பழைய ரயில் பாதைகள் இருப்பதால், ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் சிக்கல் இருக்கிறது. எனவே, ரயில்கள் இயக்கம் மற்றும் பயணியர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பழைய பாதைகள் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில், 20,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 2014 - 18ல், 11,728 கி.மீ., துாரம், 2018 - 2022ல், 17,319 கி.மீ., துாரம், 2022 - 2025 நவம்பர் வரை, 18,028 கி.மீ., பழைய பாதைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. இதனால், முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. வரும், 2030க்குள் பழைய ரயில் பாதைகளை புதுப்பிக்கும் பணிகளை முடிக்க, ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்