உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருதமலையில் ரூ.110 கோடியில் 184 அடி உயர முருகன் சிலை: அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

மருதமலையில் ரூ.110 கோடியில் 184 அடி உயர முருகன் சிலை: அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை : ''மருதமலையில், 110 கோடி ரூபாயில், 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* கோவில்கள் சார்பில் இவ்வாண்டு, 1,000 ஜோடிகளுக்கு, நான்கு கிராம் தங்க தாலி உட்பட, 70,000 ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி, திருமணம் நடத்தி வைக்கப்படும்.* ஒரு கால பூஜை திட்டம், மேலும் 1,000 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக, 25 கோடி ரூபாய் வழங்கப்படும்* அர்ச்சகர்கள், கிராமக் கோவில் பூஜாரிகள் நல வாரிய உறுப்பினராக உள்ள பூஜாரிகள், 10,000 பேருக்கு, இரு சக்கர வாகனம் வாங்க, தலா 12,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்.* சென்னை மயிலாப்பூர், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோவில்களில், திருவிழா நாட்களில், கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும்* திருச்செந்துார், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி, ஆனைமலை, பண்ணாரி, திருப்பரங்குன்றம், மருதமலை, பெரியபாளையம் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு, காய்ச்சிய பசும் பால் வழங்கப்படும்.* பெரியபாளையம் பவானி அம்மனுக்கு, 8 கோடி ரூபாயில் தங்க கவசங்கள் செய்யப்படும்* இமயமலையில் உள்ள திருக்கயிலாய மானசரோவர் ஆன்மிக பயணம் செல்லும், 500 பக்தர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியம், 50,000 ரூபாயிலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.* நேபாளம், முக்திநாத் ஆன்மிக பயணத்திற்கான அரசு மானியம், 20,000 ரூபாயிலிருந்து, 30,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.* கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இரு சக்கர வாகன கடன், 20,000 ரூபாயிலிருந்து, 50,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.* கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், 110 கோடி ரூபாயில், அருங்காட்சியகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன், அறுங்கோண வடிவ புல்வெளி நில அமைவிற்கு மத்தியில், 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்.* ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், 30 கோடி ரூபாயில், 180 அடி உயர முருகன் சிலையும், ராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி, திமிரி சுப்பிரமணியசுவாமி கோவிலில், 6.83 கோடி ரூபாயில், 114 அடி உயர முருகன் சிலையும் அமைக்கப்படும்.*திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரை பரப்பை, கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் திட்டம், 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

இலவசம்

பழனி முருகன் கோவில் இழுவை ரயிலில், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். திருத்தணி, மருதமலை, அழகர்கோவில், பண்பொழி, திருச்செங்கோடு, சென்னிமலை, சிவன்மலை ஆகிய மலை கோவில்களுக்கு, மாற்றுத்திறனாளிகள், கோவில் பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.- அமைச்சர் சேகர்பாபு

செவிலியர் கல்லுாரிகள்

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்திலும், சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்திலும், புதிதாக செவிலியர் கல்லுாரிகள் அமைக்கப்படும். திருச்சி, திருவெள்ளரை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கோவில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரி அமைக்கப்படும்.கோவை மாவட்டம், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில், பேரூர் வடவள்ளி கரிவரதராஜப்பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், பாலிடெக்னிக் கல்லுாரி அமைக்கப்படும் என, சட்டசபையில் நேற்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Thetamilan
ஏப் 18, 2025 16:17

இந்தி இனவாத சின்னம் ராமருக்கு இணையாக


தமிழ்வேள்
ஏப் 19, 2025 11:24

எப்படி ..இறைதூதரின் சின்னமாக ஆடு முன்னிலைப்படுத்தப்படுகிறதே அதுபோலவா? உங்கள் ஆட்களின் இன்ப சின்னம் , இனிய சின்னமும் ஆடுதானே ....அந்திக்கு பீவி ..அடுத்தநாள் பிரியாணி ...ஆடு ...ஹைக்கூ கவிதை எப்படி இருக்கு பாய் ?


என்றும் இந்தியன்
ஏப் 18, 2025 15:59

அப்போ ரூ 55 கோடி திருட்டு திராவிட அறிவில் மடியல் அரசு சுருட்டல் தன்னுடைய தேர்தல் செலவுகளுக்காக என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளவும்


arunachalam
ஏப் 18, 2025 15:55

அட 110 கோடிக்கு நல்ல மார்ஜின் இருக்கும்போல?


Rajah
ஏப் 18, 2025 15:37

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுப்பதற்கு முருகனின் பேரில் திட்டம் தயார். இந்துக்களும் மகிழ்வார்கள் கூட்டணி கட்சிகளும் மகிழ்வார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதைத்தான்,


Chennaivaasi
ஏப் 18, 2025 15:30

இதில் ஒரு ருபாய் கூட அரசின் செலவு கிடையாது. முழுக்க முழுக்க ஆலயத்தின் வங்கி கணக்கில் இருக்கும் பணம். ஏனோ கடை தேங்காயோ பாடல் நினைவுக்கு வருகிறது. ஆலயப்பணத்தில் செவிலியர் கல்லூரி தொடங்க காரணம்? அரசிடம் கல்வி கற்க செய்ய கூட பணம் இல்லையா? பிறகு கல்வித்துறைக்கு செலவு செய்யும் பணம் 50000 கோடி எதற்கு?


Bala
ஏப் 18, 2025 14:57

இந்து மக்களே ஏமாறாதீர்கள். இந்து மக்களின் வாக்குகளை பெறுவதற்காக நடத்தும் அப்பட்டமான நாடகம். ஒருபக்கம் சனாதன ஒழிப்பு, இன்னொருபக்கம் முருகன் கோவில் போன்ற முரண்பாடான ஏமாற்று செப்படி வித்தை. திமுக ஊழல் கட்சி மட்டுமல்ல. ஒரு மிகப்பெரிய மோசடி கூட்டம். சேகர் பாபுவை படுதோல்வி அடைய செய்ய வேண்டும் வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில்


Rajah
ஏப் 18, 2025 15:27

குவாட்டர் விற்கும் அன்பான அப்பா சொல்கின்றார் குடிக்காதே என்று. இதுவும் முரண்பாடுதான்.


Barakat Ali
ஏப் 18, 2025 14:02

தேர்தல் வந்தா ஹிந்துக்களை கூல் பண்ணிருவோம்ல ???? இதுக்கும் மசியலன்னா இருக்கவே இருக்கு தாகசாந்தி .... பிரியாணி ..... ஓட்டுக்கு துட்டு .....


CHELLAKRISHNAN S
ஏப் 18, 2025 13:54

I am an ardent devotee of Lord Muruga. Better to maintain the present idols. installation of new statue is a total waste. better to arrange good service to devotees,


Ramesh Sargam
ஏப் 18, 2025 13:07

முருகர் கேட்டாரா அவ்வளவு பெரிய சிலை, அவ்வளவு செலவழித்து தனக்கு சிலை வைக்கவேண்டும் என்று? ஊர் பணத்தை கொள்ளையடிக்க கடவுள் பெயரை பயன்படுத்துவது உங்களுக்கு வெட்கமாயில்லை?


Venkateshkumar Dharmaraj
ஏப் 18, 2025 13:00

யாரும் புதிதாக சிலை கேட்கவில்லை, இருக்கிற கோவிலை நன்றாக பராமரித்தல் Good


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை