உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்ட்ரோல் ரூம் போட்டதால் தலைவலி; தமிழக பதிவுத்துறையில் தினமும் குவியுது 200 புகார்

கன்ட்ரோல் ரூம் போட்டதால் தலைவலி; தமிழக பதிவுத்துறையில் தினமும் குவியுது 200 புகார்

சென்னை: பதிவுத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தினமும், 200 புகார்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுதும், 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. தாமதமின்றி பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் என, சார் - பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைமை அறிவுறுத்தி உள்ளது. மேலும், சார் - பதிவாளர் அலுவலக செயல்பாடுகள் நேரலை வாயிலாக கண்காணிக்கப்படுகின்றன. இருப்பினும், பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவுக்காக நேரடியாக வரும் பொது மக்கள், அங்குள்ள அலுவலர்கள், பணியாளர்களால் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆவண எழுத்தர் வாயிலாக வந்தால் மட்டுமே பணிகள் நடக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், சார் - பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க, பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டது. மொபைல் போன் மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கட்டுப்பாட்டு அறைக்கு தினமும், 200 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் தொழில்நுட்ப பிரச்னை தொடர்பான புகார்கள், அதற்கான பிரிவு வாயிலாக உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன. அதேநேரம், சார் - பதிவாளர்களின் செயல்பாடு தொடர்பான புகார்கள், மேலதிகாரிகள் விசாரணைக்கு அனுப்பப்படுகி ன்றன. இந்த புகார்கள் தொடர்பாகவும், பொது மக்களிடம் ஏற்படும் அதிருப்தி குறித்தும், டி.ஐ.ஜி., மாவட்ட பதிவாளர் வாயிலாக விசாரித்து, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Manimaran
நவ 11, 2025 08:37

வருவாய் எவ்வளவு வருகிறது என்பதை தெரிந்து கொள்ளவே இந்த புகார் மையங்கள் உதவலாம்... நமக்கான பங்கை கணக்கீடு கொள்ளலாம்....


Varadarajan Nagarajan
நவ 11, 2025 07:32

லஞ்ச தொகையில் வித்யாசம் இருக்கக்கூடாதென்றுதான் சமத்துவ அடிப்படையில் பதிவு செய்யப்படும் சொத்தின் மதிப்பில் சதவிகித அடிப்படையில் வசூலிக்கப் படுகிறது. லஞ்சமும் அதிகமாக உள்ளது என யாராவது கேட்டால் மேலிடம் வரையில் பங்கு கொடுக்கணும் என யாருமே தெரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு சொல்லப்படுகின்றது. அதையும் பதிவு அலுவலகத்திற்கு உள்ளே வாங்கினால் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் ஆவண எழுத்தர்கள்மூலம் அலுவலகத்திற்கு வெளியே செட்டில் செய்யப்படுகின்றது. இதனால் மக்களுக்கு சிரமம் இருக்கக் கூடாதென்று நடைமுறைகளை இவ்வளவு எளிமையாக்கி கச்சிதமாக செயல்படுத்தப் படுகிறது. அவை அனைத்தையும் மீறி சில புகார்கள் வருவதால் நாங்களும் நடவடிக்கை எடுக்கின்றோம் என கணக்கு காட்ட ஒன்றிரண்டு இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் சிக்கியவர்கள்மீது உண்மையில் மேல் நடவடிக்கையெடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தந்தாக இதுவரை ஏதாவது யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லலாம். மக்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாடல் ஆட்சி சிறப்பாக செயல்படுகின்றது.


kannan sundaresan
நவ 11, 2025 07:10

கன்ட்ரோல் ரூம் போட்டால் புகார் மட்டும்தான் அளிக்க முடியும். லஞ்சம் வாங்குபவர்கள் மீது புகார் அளித்தால் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?


visu
நவ 11, 2025 06:27

என்ன ரகசியம் ஆவண எழுத்தர்கள் பதிவாளர்களின் லஞ்சம் வாங்கும் ஏஜெண்டுகள் நேரடியா வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்பதால் இப்படி இது ஊருக்கே தெரிந்த விஷயந்தான்


Appan
நவ 11, 2025 06:13

good action


D.Ambujavalli
நவ 11, 2025 05:51

என்னதான் ஆயிரம் control room , நடவடிக்கை என்றாலும், ப்ரோக்கர்கள் மூலம் ‘வரவேண்டியதை’ கச்சிதமாக வரவு வைத்த பிறகுதான் சார் பதிவாளர் கவனத்துக்கே போகும் சட்டமும், நியதிகளும் மீறப்படுவதற்காகவே இயற்றப்படுகின்றன என்பதே உண்ம


முக்கிய வீடியோ