ஆயுத பூஜைக்கு 2,000 சிறப்பு பஸ்கள்
சென்னை:அரசு போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் கூறியதாவது: அடுத்த மாதம் 11ல் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளதால், வெளியூர் செல்லும் மக்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 300 கி.மீ., துாரத்துக்கு மேல் செல்லும் பயணியர், www.tnstc.inஎன்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணியரின் தேவைக்கு ஏற்ப, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். அதுபோல், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களோடு, 600க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களையும் இயக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.