உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 20,378 சிறப்பு பஸ்கள் தீபாவளிக்கு இயக்க முடிவு

20,378 சிறப்பு பஸ்கள் தீபாவளிக்கு இயக்க முடிவு

சென்னை: ''தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகம் முழுதும் நான்கு நாட்களுக்கு 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,'' என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்., 16ம் முதல் 19ம் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் செல்லும் 2092 பஸ்களுடன், நான்கு நாட்களுக்கும் சேர்த்து 5900 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக, 14,268 பஸ்கள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு, 6,110 சிறப்பு பஸ்களுடன், மொத்தம் 20,378 பஸ்கள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகை முடிந்த பின், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணியர் வசதிக்காக, அக்.,21 முதல் 23ம் தேதி வரை தினமும் இயக்க கூடிய 2092 பஸ்களுடன், 4253 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். இது தவிர, பல்வேறு ஊர்களுக்கு, 15,129 பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ்களின் இயக்கம் குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும், 94450 14436 என்ற மொபைல் எண்ணை, 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு, 1800 425 6151 மற்றும் 044- 2474 9002, 044- 2628 0445, 044 -2628 1611 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். பயணியர் வசதிக்காக, சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில், 150 இணைப்பு பஸ்கள், 24 மணி நேரமும் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை