உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலநிலை மாற்றம் காரணமாக 209 மாடு இனங்கள் அழியலாம்

காலநிலை மாற்றம் காரணமாக 209 மாடு இனங்கள் அழியலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரியில், 'காலநிலை மாற்றத்துக்கு நடுவிலும் கால்நடை வளர்ப்பில் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அடைதல்' என்ற தலைப்பில், தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்கில், கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் பேசியதாவது:உலகளாவிய உணவு பாதுகாப்பில், கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண் பொருளாதாரத்தில், கால்நடை துறையின் மதிப்பு கூட்டப்பட்ட விகிதம், 24.32 சதவீதத்தில் இருந்து, 30.47 சதவீதமாக உயர்ந்து உள்ளது.பருவமழைக்கும், கால்நடை இனவிருத்திக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. காலநிலை மாற்றம் காரணமாக, மழை பொழிவில் பாதிப்பு ஏற்படும் போது, விவசாயத்துக்கு மட்டுமில்லாமல், கால்நடைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்லுயிர் பெருக்க சுழற்சிக்கு காலநிலை மாற்றம், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில், 7,616 கால்நடை இனங்கள் உள்ளன. இவற்றில், 20 சதவீதம் அழிவின் விளிம்பில் உள்ளன. குறிப்பாக, 209 மாடு இனங்கள் அழியும் நிலையை எட்டியுள்ளது. இவற்றை தவிர்க்க, தட்பவெப்ப நிலை மற்றும் இயற்கை சூழலை மீட்டெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rama adhavan
பிப் 23, 2024 11:48

அழியக் கூடிய மாட்டு இனங்களை cloning முறையில் உருவாக்க முடியாதா?


Ramesh Sargam
பிப் 23, 2024 06:41

சரி, மாடுகள் இனவிருத்திக்கு அடுத்த பட்ஜெட்டில் நாங்கள் ஒரு இரண்டாயிரம் கோடி ஒதுக்குவோம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ