உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீட்பு பணிக்கு 21,000 போலீசார் தயார்: டி.ஜி.பி., சங்கர் ஜிவால்

மீட்பு பணிக்கு 21,000 போலீசார் தயார்: டி.ஜி.பி., சங்கர் ஜிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க, 21,000 போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புயல், வெள்ளம், கனமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்; பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் விதம்; உபகரணங்களை பயன்படுத்தும் விதம் பற்றி, அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியில், 21,000 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், மாநகரம் மற்றும் மாவட்டங்களுக்கு, 136 குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டு உள்ளனர். வடகிழக்கு பருவமழை நிவாரண பணிக்காக, சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருதம் வளாகத்தில், 24 மணி நேரமும் இயங்கும், மாநில காவல் துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இவற்றுடன், காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட, மாநகர பேரிடர் மீட்பு சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக தகவல்களை பெற்று, வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைக்கு ஏற்ப, மாநில காவல்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை விரைந்து செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

T SIVAKUMAR
அக் 15, 2024 12:05

லஞ்சம் வாங்க எத்தனை பேர் ரெடி?


Barakat Ali
அக் 15, 2024 10:15

மெத்து சாதிக் க்கு துடிப்பான தமிழன் ன்னு புச்சா விருது குடுத்துருங்க ..... எல்லாம் நல்லபடியா நடக்கும் ....


Duruvesan
அக் 15, 2024 07:56

அப்போ விடியலு 3 வருசமா ஓட்டினது திராவிட விடியா மாடல் ?


Venkateswaran Rajaram
அக் 15, 2024 06:53

ஆக இவர்கள் எதையுமே தரமாக செய்ய மாட்டார்கள் அதாவது சாலைகள் ஓடைகள்,. அதை விட்டு மீட்புப் பணி செய்து நற்பெயரை வாங்கி விடுவார்கள்.. நாமும் சந்தோஷப்பட்டு விடுவோம்... அனைத்தும் தரமாக இருந்தால் எதற்கு இந்த மீட்புப் பணி என்ற நாடகம் என்று மக்கள் எப்பொழுது உணர்கிறார்களோ அப்பொழுதுதான் புதிய விடியல் ஏற்படும்


முக்கிய வீடியோ