2,447 ஆமை பறிமுதல்
திருச்சி: கோலாலம்பூரில் இருந்து, நேற்று, திருச்சி விமான நிலையத்துக்கு வந்த விமான பயணியரின் உடைமைகளை, வான் நுண்ணறி பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பயணி ஒருவர் கொண்டு வந்த சாக்லேட் பெட்டிகளில், உயிருடன் ஆமைகளை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,447 ஆமைகளை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், விமானப் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.