உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை கொட்டப்போகுது; சென்னை மக்களே உஷார்!

கனமழை கொட்டப்போகுது; சென்னை மக்களே உஷார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்று முதல் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று மாலை முதலே மழை கொட்டித் தீர்த்தது. நள்ளிரவிலும் கனமழை நீடித்தது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கின. இதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. மேலும், நீர்நிலைகளில் நீரின் அளவும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d0n8yjdt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக, சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.இது மேற்கு - வடமேற்கு திசையில், நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை, அதற்கடுத்த 48 மணிநேரத்தில் நகரக் கூடும். இதன் காரணமாக, தென்மேற்கு பருவமழை விலகி, நாளை வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கக் கூடும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று காலை 10 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எனினும் பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பதிவான மழை விபரம்

சென்னை மாவட்டம்

ஐஸ் ஹவுஸ் - 50.7 மி.மீ.,உத்தண்டி - 46.2 மி.மீ.,அடையார் ஈகோ பார்க் - 41.7 மி.மீ.,அடையார் - 34.5 மி.மீ.,ஆலந்தூர் - 33.3 மி.மீ.,தேனாம்பேட்டை - 31.5 மி.மீ.,கோடம்பாக்கம் - 31.5 மி.மீ.,பெருங்குடி - 30.6 மி.மீ.,முகலிவாக்கம் - 30 மி.மீ.,சோழிங்கநல்லூர் - 23.6 மி.மீ.,வளசரவாக்கம் - 23.4 மி.மீ.,மதுரவாயல் - 23.1 மி.மீ.,அண்ணாநகர் - 20.7 மி.மீ.,

ஈரோடு மாவட்டம்

வரட்டு பள்ளம் - 36.2 மி.மீ.,சத்தியமங்கலம் - 32 மி.மீ.,மொடக்குறிச்சி - 27.2 மி.மீ.,அம்மாபேட்டை - 14 மி.மீ.,கவுந்தப்பாடி - 13.4 மி.மீ.,பெருந்துறை - 13 மி.மீ.,சென்னிமலை - 12 மி.மீ.,நம்பியூர் - 8 மி.மீ.,தாளவாடி - 24 மி.மீ.,பெருந்துறை - 13 மி.மீ.,பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5,269 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 87.34 அடி, நீர் இருப்பு 19.90 டி.எம்.சி.,யாக உள்ளது.

நாமக்கல் மாவட்டம்

மோகனூர் - 15 மி.மீ.,மங்களபுரம் - 12.6 மி.மீ.,பரமத்திவேலூர் - 11 மி.மீ.,நாமக்கல் - 8.5 மி.மீ.,

பெரம்பலூர் மாவட்டம்

பாடலூர் - 15 மி.மீ.,

சேலம் மாவட்டம்

சேலம் - 43.6 மி.மீ.,ஏற்காடு - 19.2 மி.மீ.,மேட்டூர் - 13.2 மி.மீ.,கெங்கவல்லி - 12 மி.மீ.,

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் - 32 மி.மீ.,

நீலகிரி மாவட்டம்

கீழ் கோத்தகிரி எஸ்டேட் - 33 மி.மீ.,கிளன்மார்கன் - 25 மி.மீ.,அப்பர் பவானி - 22 மி.மீ.,அடார் எஸ்டேட் - 20 மி.மீ.,கிண்ணக்கொரை - 17 மி.மீ.,குந்தா பாலம் - 16 மி.மீ.,பந்தலூர் - 16 மி.மீ.,குன்னூர் - 11 மி.மீ.,

கோவை மாவட்டம்

வேளாண் பல்கலை - 60 மி.மீ.,கோவை தெற்கு தாலுகா ஆபிஸ் - 78 மி.மீ.,சூலூர் - 38 மி.மீ.,சிறுவாணி அடிவாரம் - 12 மி.மீ.,பொள்ளாச்சி தாலுகா ஆபிஸ் - 52 மி.மீ.,மாக்கினாம்பட்டி - 64 மி.மீ.,கிணத்துக்கடவு - 23 மி.மீ.,சின்னக் கல்லார் - 23 மி.மீ.,வால்பாறை பிஏபி - 53 மி.மீ.,வால்பாறை தாலுகா ஆபிஸ் - 51மி.மீ.,பீளமேடு - 58.5 மி.மீ.,அன்னூர் -12.40 மி.மீ.,வாரப்பட்டி -27 மி.மீ.,தொண்டாமுத்தூர் -18 மி.மீ.,

மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி - 15.8 மி.மீ., கொள்ளிடம் - 2 மி.மீ.,

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் 23.2 மி.மீ., கொடைக்கானல் போட் கிளப் - 18.7 மி.மீ., கொடைக்கானல் - 11 மி.மீ.,

கிருஷ்ணகிரி மாவட்டம்

ஜம்பு குட்டப்பட்டி - 30 மி.மீ., பேனுகொண்டாபுரம் - 27.2 மி.மீ., ராயக்கோட்டை - 17 மி.மீ.,

புதுக்கோட்டை மாவட்டம்

காரையூர் - 55.4 மி.மீ., குடுமியான்மலை - 41.4 மி.மீ., ஆவுடையார் கோயில் - 40.8 மி.மீ., அன்னவாசல் - 31 மி.மீ.,

ராணிப்பேட்டை மாவட்டம்

மின்னல் - 22.6 மி.மீ., ஆற்காடு - 19.4 மி.மீ., வாலாஜா - 16.8 மி.மீ.,

சிவகங்கை மாவட்டம்

தேவகோட்டை - 28.4 மி.மீ., சிவகங்கை TB - 25.8 மி.மீ., காரைக்குடி - 13 மி.மீ., சிவகங்கை - 12 மி.மீ.,

தென்காசி மாவட்டம்

சங்கரன்கோவில் - 44 மி.மீ., கருப்பா நதி அணை -10 மி.மீ.,

திருச்சி மாவட்டம்

கல்லக்குடி - 25.4 மி.மீ., திருச்சி டவுன் - 20 மி.மீ., திருச்சி ஜங்ஷன் - 19 மி.மீ., பொன்மலை - 17. 8மி.மீ.,

திருப்பூர் மாவட்டம்

மூலனூர் - 49 மி.மீ., உடுமலை - 35 மி.மீ., நல்லதங்காள் ஓடை - 30 மி.மீ., அமராவதி அணை - 30 மி.மீ., தாராபுரம் - 24 மி.மீ., வட்டமலைக் கரை ஓடை - 22 மி.மீ., குண்டடம் - 14 மி.மீ.,

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் - 25 மி.மீ., வளவனூர் -12 மி.மீ.,

விருதுநகர் மாவட்டம்

சாத்தூர் - 67 மி.மீ., பெரியார் அணை - 43 மி.மீ., வேம்பக்கோட்டையனை - 26 மி.மீ.,

மதுரை மாவட்டம்

ஆண்டிப்பட்டி தாலுகா ஆபிஸ் 75.2 வாடிப்பட்டி 62 சோழவந்தான் 50 கள்ளந்திரி 24 பெரியப்பட்டி 20.6


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
அக் 14, 2024 20:57

அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அரசுக்கும், மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மக்களே, பத்திரமாக வீட்டிலேயே தங்கவும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் பல துறை அமைச்சர்கள் நீங்கள் வெளியே வந்து பாதிக்கப்படப்போகும் இடங்களில் தங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றவேண்டும். நீங்களும் வீட்டிலேயே தங்கிவிடவேண்டாம். எப்பொழுதும் செய்வது போல் இந்தமுறையும், எல்லாம் வீபரீதங்களும் ஏட்பட்டபின், வெளியில் வந்து ஒரு போட்டோ சூட் நடத்தி, நிவாரணம் அறிவிக்க முயலாதீர்கள்.


SUBRAMANIAN P
அக் 14, 2024 17:10

எல்லா ஏரியாவும் போட்டிருக்கீங்க. எங்க ஏரியா பெயரை போடல...


Lion Drsekar
அக் 14, 2024 12:51

மழையே தயவு செய்து பொழிந்து விடு அரசாங்கத்தில் சம்பளம் பெரும் அதிகாரிகள் குறிப்பாக வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றுபவர்கள் கூறியபடி நடந்ததாக சரித்திரமே இல்லை, அதனால்தான் இன்று தெருவிக்கு தெரு ஜோசியக்காரர்கள், அவரவர்கள் தங்களுக்கு ஆராய்ச்சியாளர்கள், தனியார் வானிலை அறிவிக்கும் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் என்று ஆளுக்கு ஆள் காளான்போல் தோன்றிவிட்டனர், எது எப்படியோ நாங்கள் படகுகள் வாங்கிவிட்டோம் . குடிநீர் ஆதாரங்களில் இருக்கும் நீரை உடனடியாக கடலுக்கு திருப்பி அனுப்ப ஏற்படு எய்யவனேயும், ஆகவே பொய்த்துவிடாதே, பிறவு எங்கள் தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிடும் எந்த சோசியக்காரர் சொல்வது நடக்கப்போவது உண்மை என்று பார்க்க இதுவே தருணம், சீரியஸான நேரத்தில் காமிடியா என்று நினைக்கலாம், முன்பு இந்திராகாந்தி கூறியது நினைவுக்கு வந்தது, தன வாழ்ழ்வில் ஒருநாள் கூட இந்த வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தினர் சொன்னது நடக்கவே இல்லையே என்று வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார் , இரண்டு காரணம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பே அவரே கூறியிருக்கிறார் மற்றொன்று இவர்களை நம்பி நாம் படகு வாக்கிடாக்கி எல்லாம் வாங்கிவிட்டோம் , மழைக்கு பயன்படவில்லை யாராலும் அந்த அடகுகள் மீனவர்களுக்கு இலவசமாக வழங்கலாம் , வாக்கி டாக்கி முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் காலை முதல் மாலை வரை மழை ,வெயில் , பனி பாராமல் எல்லா சாலைகளிலும் இருபுறமும் நின்றுகொண்டு பனியாற்றும் அதிகாரிகளுக்குப் பயன்படும், வந்தே மாதரம்


Ramesh Sargam
அக் 14, 2024 11:51

தமிழக மக்களே இந்த திருட்டு திமுக அரசை நம்பி அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். உங்கள் உயிர் உங்கள் கையில். உயிர் போனால் மட்டுமே அரசு நிவாரணம் கொடுக்கும். உங்களுக்கு உங்கள் உயிர் முக்கியமா அல்லது அரசு அள்ளிவீசும் நிவாரணம் முக்கியமா? யோசித்து முடிவு எடுங்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 14, 2024 11:26

வடசென்னை, தென்சென்னை மற்றும் மத்திய சென்னை மக்கள் குதூகலிக்க போகிறார்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த எம் பி க்கள் மழை நீர் தேங்கா வன்னம் வடிகாள் வேலைகளை செய்து முடித்திருக்கிறார்கள். .இது தெரியாமல் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று மக்களை பீதி கிளப்புகிறது..... தண்ணீர் தேங்கினால் தானே பயப்பட....நன்றி எம் பிகளே....!!!


Venkatesan
அக் 14, 2024 12:49

செம்ம நக்கல்.


sridhar
அக் 14, 2024 10:59

மழையை தடுக்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.


ஸ்ரீ
அக் 14, 2024 09:27

boat இருக்க கவலை எதற் கு? ??? இப்படிக்கு திராவிட விடியா அரசு.....


sundarsvpr
அக் 14, 2024 08:45

வான் செழிப்பு என்றால் மாதம் மும்மாரி பெய்திடவேண்டும். இதற்கு மாறாக பெய்வது தர்மம் தாழ்ந்துவிட்டது என்று கருதவேண்டும். நீர் புனிதமானது ஆனால் இதனை காய்ச்சி குடிக்கவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். நம்முடைய வீட்டு வாசல்படியே குப்பம் கூலமாய் உள்ளது. இயற்கையை மீறி செய்திடும் காரியங்கள் தவிர்த்தல் அவசியம். அரசு செய்யாது. நாம் மட்டும் செய்யவேண்டும் இதனை பார்த்து அரசு செய்யுமா என்பது சந்தேகம். இதனை தீர்க்க தேர்தல் வாக்கு சாவடிகள் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை