உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஒப்பந்த செவிலியர்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு

 ஒப்பந்த செவிலியர்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு

சென்னை: தொடர் போராட்டம் நடத்திய நிலையில், ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தினர். சங்க நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. கோரிக்கைகளை ஏற்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, சிலர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மேலும், ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க செயலர் சுபின் கூறுகையில், ''நாங்கள் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு கேட்டிருந்தோம். ஆனால், 182 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. எனினும் கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சி. மற்ற கோரிக்கைகளையும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ