உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 28 லட்சம் மின் இணைப்புகளில் கணக்கெடுக்க மீட்டர்கள் இல்லை

28 லட்சம் மின் இணைப்புகளில் கணக்கெடுக்க மீட்டர்கள் இல்லை

சென்னை: தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட 3.32 கோடி மின் இணைப்புகளில், 3.04 கோடி இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளன. 28 லட்சம் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர்கள் இல்லை. மேலும், 23.43 லட்சம் விவசாய இணைப்புகளில், 4.26 லட்சத்துக்கு மட்டுமே மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 31 நிலவரப்படி, மாநிலம் வாரியாக உள்ள மின் இணைப்புகள், அவற்றில் மீட்டர் பொருத்தப்பட்டவற்றின் எண்ணிக்கை விபரங்களை, மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தில், 3.32 கோடி இணைப்புகளில், 91.54 சதவீதம் அதாவது, 3.04 கோடி இணைப்புகளில் மீட்டர்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகளில், 96.38 சதவீத இணைப்புகளிலும், விவசாயப் பிரிவில், 18.20 சதவீத இணைப்புகளிலும் மீட்டர்கள் உள்ளன.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஒவ்வொரு இணைப்பிலும் மின் பயன்பாடு விபரம் தெரிந்தால்தான், கட்டணம் வசூலாகிறதா என்பது தெரியவரும். 'ஓவர்லோடு' ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, சரிசெய்ய முடியும்.இலவச மின்சாரம் வழங்கப்படும் விவசாயப் பிரிவிலும், மீட்டர் பொருத்தப்படுகிறது; மீட்டர் பொருத்தினாலும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிரிவு வாயிலாகமீட்டர் உள்ள விபரம் பிரிவு - மொத்த இணைப்புகள் - மீட்டர் உள்ளவை - சதவீதம் வீடு - 2.47 கோடி - 2.38 கோடி - 96.38 வணிகம் - 36.70 லட்சம் - 36.70 லட்சம் - 100தொழில் - 7.48 லட்சம் - 7.48 லட்சம் - 100 விவசாயம் - 23.43 லட்சம் - 4.26 லட்சம் - 18.20ரயில்வே - 51 - 51 - 100 பொது குடிநீர், தெருவிளக்கு - 8.16 லட்சம் - 8.16 லட்சம் - 100 இதர பிரிவு - 9.43 லட்சம் - 9.43 லட்சம் - 100 மொத்தம் - 3.32 கோடி - 3.04 கோடி - 91.54


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

S MURALIDARAN
செப் 23, 2024 22:17

உலக நாடுகளே வியந்து பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் இது.


Ethiraj
செப் 20, 2024 07:44

TNEB must publish in all news papers what is the electricity tariff in Dravidian states like KERALA Karnataka AP TELENGANA PONDICHERY The loss or profit these states electricity board are incurring


Ethiraj
செப் 20, 2024 07:17

All distribution transformers all over TN must be provided with HT metering which is to be recorded in remote location by respective SE s. This will give exact data of THEFT FREE UN METERED Electricity Will Govt act In the interest of state and citizens Present govt will be appreciated by entire country.


premprakash
செப் 19, 2024 22:23

9 லட்சம் பெரிய இடத்து வீடுகளுக்கு மீட்டர் போடாமல் மினிமம் சார்ஜ் கட்டி மின்சாரம் திருடி கொண்டு இருக்கிறார்கள்.....எளிய மக்களின் தலையில்தான் அந்த நட்டம் எல்லாம் விழுகிறது..


Lion Drsekar
செப் 19, 2024 12:11

இருக்கும் மீட்டர்கள் ஒழுங்காக ஓடுகிறதா? வாடிக்கையாளர்களிடம் வாங்கிய டெபாசிட் பணத்துக்கு வட்டி என்னா ஆச்சு, அதை கழித்துக் கொள்கிறார்களா? இறுமாதத்துக்கு ஒருமுறை எடுப்பதற்கு பதிலாக மாத மாதம் எடுத்தால் என்ன ஆகப்போகிறது? மீட்டர் ரீடிங் எடுப்பவர்கள் சரியாக எடுக்கிறார்களோ? எல்லாவற்றிற்கும் எல்லோரிடமும் ஆதாரம் இருக்கிறது. ஆனாலும் யாரும் முன்வராத தயாராக இல்லை, தினமலரில் வரும் டீக்கடை போல் சவுக்கு தோப்புக்குள் நாம் சென்று பார்ப்போம் வந்தே மாதரம்


Kasimani Baskaran
செப் 19, 2024 05:46

இலவசமாக கொடுக்கும் மின்சாரத்துக்கு ஏன் மீட்டர் என்று அதை சாப்பிட்டு விட்டார்கள். இப்பொழுது மறுபடியும் பசி எடுக்கிறது. என்ன செய்வார்கள் பாவம்.


ராம்பாபு
செப் 19, 2024 01:03

திருட்டு திராவிடன் திருட்டு திராவிடன்களுக்குக் குடுத்த திருட்டு திராவிட கனெக்‌ஷன்கள். கணக்கெல்லாம் கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை