உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 28 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்

28 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்

 தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 2.63 லட்சம் டன் கொள்ளளவு உடைய மேற்கூரை அமைப்புடன் கூடிய, 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்களும்; காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 49,000 டன் கொள்ளளவு உடைய ஆறு நவீன நெல் சேமிப்பு வளாகங்களும் ஏற்படுத்தப்படும்  நெல் மூட்டைகளை பாதுகாப்பாக அடுக்கி வைக்க, 25,000 இரும்பு இடைச்செருகு கட்டைகளும், நெல்லின் ஈரப்பதம் அறிய, 2,500 'டிஜிட்டல்' கருவிகளும், தஞ்சை, திருவாரூரில் தலா ஒரு டிராக்டருடன் கூடிய நெல் உலர்த்தும் இயந்திரமும் வழங்கப்படும். இத்திட்டம் பல்வேறு நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து, 480 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் உணவு மானியத்திற்கு, 12,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
மார் 16, 2025 11:36

இதை ஏன் தனியார் துறை கம்பெனிகள் செய்யக்கூடாது? அல்லது அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அங்குள்ள கம்பெனிகளிடமிருந்து நிதி வசூலித்து இவைகளை அமைக்கலாமே? முன்பு திருநெல்வேலி கலெக்டர் நீர்நிலைகளை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் போல


Dharmavaan
மார் 16, 2025 09:00

கோடவ்ன்கள் பலமாடி கட்டிடமாக கட்ட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை