உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் துயரம் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: தவெகவினர் உள்ளிட்ட 3 பேர் கைது

கரூர் துயரம் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: தவெகவினர் உள்ளிட்ட 3 பேர் கைது

சென்னை: கரூர் துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் அவதுறு பரப்பியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பலர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைக்க, அந்த ஆணையமும் தமது விசாரணையை தொடங்கி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sh43xe9m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவம் பற்றி பொதுவெளியியில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று தமிழக அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டு இருந்தது. சமூகவலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளைத் தொடர்ந்து 25 பேர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்து இருந்தனர்.இந் நிலையில் கரூர் துயரச் சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் தவெகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பாஜவைச் சேர்ந்தவர்.அவர்களின் விவரம் வருமாறு; 1. சகாயம் (38) பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர், பாஜ மாநிலச் செயலாளர் (கலை மற்றும் கலாசாரம்)2. மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், தவெக உறுப்பினர்3. ஆவடியைச் சேர்ந்தவர் சரத்குமார்(32) தவெக 46வது வார்டு செயலாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Venugopal S
செப் 30, 2025 07:47

சந்தில் சிந்து பாடுவதில் பாஜகவினர் கில்லாடிகள்!


அப்பாவி
செப் 30, 2025 07:41

அப்போ அந்த மாணவர் சங்கம்? அவர்களுக்கு மட்டும் சிறப்பு விலக்கு


Nathan
செப் 30, 2025 03:50

இந்த சம்பவத்தில் சதி ஏதும் உள்ளதா என்று CBI விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்


Modisha
செப் 29, 2025 22:29

தூத்துக்குடி சம்பவம் , இன்னபிற சம்பவங்கள் பற்றி அவதூறு செஞ்சவனை எந்த சிறையில் போடணும்.


NACHI
செப் 29, 2025 21:56

பல விடியோ ஆதாரம் இருக்கு ...திமுகா ஆட்சிக்கு சங்கு ரெடி


ஜெய்ஹிந்த்புரம்
செப் 29, 2025 21:39

இங்கேயும் பாருங்க போலீஸ்கார்.. நெறைய பொய்யர்கள் இருக்காங்க


Kulandai kannan
செப் 29, 2025 21:37

மொத்தத்தில் பிள்ளையார் பிடிக்க குரங்காகி விட்டது, யாருக்கோ...


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 29, 2025 20:30

வாட்ஸ்அப்பில் வலம் வரும் பாலிமர் செய்தியில் பேட்டி கொடுத்த பெண்ணை பிடிக்க இன்று இரவு போலீஸ் அவர் வீட்டின் கதவை தட்டுமா? என்ன தெளிவான, அறிவுபூர்வமான, தரமான, ஆணித்தரமான பேச்சு அந்த பெண்ணிற்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். கரூர் பொதுமக்கள் அந்த தாயை பாதுகாக்க வேண்டும்.


Oviya Vijay
செப் 29, 2025 20:05

ஓ... ஒரு சங்கியும் கைதா... வெரி குட்...


vivek
செப் 29, 2025 21:06

இருநூறு ஓவியறு


ஆரூர் ரங்
செப் 29, 2025 19:59

போலீஸ் தவறுகளை மறைக்க போலீசே அடக்குமுறையில் இறங்கிவிட்டது புரிகிறது. இவர்களெல்லாம் அரசியலமைப்பு, மக்கள் உரிமை ஊடக சுதந்திரம்ன்னு பேசுவது போலித்தனம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 29, 2025 23:20

அதுக்காக கல்லெடுத்து வீசினாங்க, கரண்ட் கட் பண்ணாங்க, செந்தில் பாலாஜி சதி பண்ணாரு, ன்னு வாய்க்கு வந்தபடி நீங்க பேசுவீங்களா?


vivek
செப் 30, 2025 06:24

உண்மைய சொன்னா பொய்ஹிந்து உனக்கு வலிக்குதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை