உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!

கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், வேத பாராயணம் படிக்க வந்த 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நடந்த பிரம்மோற்சவ விழாவில், வேத பாராயணம் படிக்க வந்த 3 பேர் குளத்தில் இறங்கினர். கால் வழுக்கியதில் அடுத்தடுத்து மூவரும் கீழே விழுந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n8vo4mr1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீரில் மூழ்கிய அவர்கள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உதவி செய்ய ஆட்கள் ஓடி வருவதற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. போலீசார் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் குன்றத்தூரை சேர்ந்த ஹரிஹரன்,16, அம்பத்தூரை சேர்ந்த வெங்கட்ராமன், 17, தென்காசியை சேர்ந்த வீரராகவன், 24, என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வேத பாராயணம் செய்ய வந்த மூவர் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மே 06, 2025 20:51

சந்தியாவந்தனம் செய்வதற்காக வந்தார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன ..... இணையத்தில் ஆராய்ந்ததில் சந்தியாவந்தனம் இஸ்லாமியர்கள் நமாஸ் படிப்பது போல ஒரு கடமை ....


Md.Syed
மே 06, 2025 14:40

இறைவனை வழிபடுபவர்கள் சுத்தமான முறையில் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்


அப்பாவி
மே 06, 2025 13:34

திருவள்ளூர் குளம் குளிக்கிற மாதிரியா இருக்கு?


R. SUKUMAR CHEZHIAN
மே 06, 2025 13:09

இறைவா மிகவும் வேதனையாக உள்ளது, வேத பாராயணம் படிக்க வந்த மாணவர்கள் நம் தர்மத்தின் சொத்துகள், வேத பாடசாலையில் வேத பாராயணத்துடன் தற்காப்பும் சொல்லி கொடுத்தால் நல்லது. ஓம் சாந்தி.


Narayanan
மே 06, 2025 12:58

வருந்துகிறேன்.


Barakat Ali
மே 06, 2025 12:31

வேதம் கற்கும்போதே நீச்சலும் கற்றிருக்கலாம் .... பாதுகாப்புக்கு யாருமில்லை என்பது வியப்பை அளிக்கிறது ......


Ramesh Sargam
மே 06, 2025 12:10

மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது இளைஞர்களின் மரணம். அந்தப் பெருமாள் அவர்களுக்கு மோட்சத்தை கொடுக்கவேண்டும். ஓம் ஷாந்தி.


Raja k
மே 06, 2025 11:58

,திராவிட மாடல் ஆட்சியின் திட்டமிட்ட சதி என சிலபேர் கமென்ட் போட வருவாங்களே


LakshmiNarasimhan KS
மே 06, 2025 11:30

குளத்து படிக்கட்டுக்களை சுத்தம் செய்து இருக்க வேண்டும். பாசி படிந்து இருக்கும் . இது குளம் சரியாக பராமரிக்கவில்லை


seshadri
மே 06, 2025 11:08

இந்த கோவிலில் வெல்லம் கரைத்தால் உடம்பில் உள்ள நோய்கள் தீரும் என்று ஐதீகம். ஆனால் அந்த வெல்லம் கரைக்கும் இடத்து பக்கம் யாரும் போக முடியாத அளவுக்கு துர் நாற்றம் வீசும். மேலும் பாசி வழுக்கும் நிர்வாகம் தூங்கி கொண்டிருக்கிறதா என்று theriyavillai.


V Venkatachalam
மே 06, 2025 12:07

நீங்களே சொல்லிட்டீங்க.கோயில் சொத்தை எவ்வளவு மீட்டோம் மற்றும் எத்தனை ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தோம் என்றும் விளம்பரம் எழுதுவதில் ரொம்ப பிஸியா இருக்காங்க. அல்லோலயா அமைச்சர் அந்த விஷயங்களை மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருக்கார்.