உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி; நெல்லையில் சோகம்

கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி; நெல்லையில் சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லை: நெல்லை அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண்கள் மூவர், பெண்கள் இருவர், குழந்தைகள் இருவர் என 7 பேர் பலியாகினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wdy5oli2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாங்குநேரியை அடுத்த தளபதி சமுத்திரம் கீழுர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை கடந்து, எதிர் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், இரு கார்களில் சென்றவர்களில் குழந்தை உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார், விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தினால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஏப் 27, 2025 22:06

ட்ரைவர் மொபைலில் பேசினால் கார் தானே ஆஃப் ஆயிடணும்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 27, 2025 18:58

சென்டர் மீடியாவில் மோதியவர் , மொபைலை பார்த்தவாறு ஒட்டியிருப்பார்? ஆனால் மொபைல் போனை பார்த்துக்கொண்டு வோட்டுவதை தடுக்காமல் இருக்கும் அரசுகளை ?


புதிய வீடியோ