உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 சதவீத இடஒதுக்கீடு: பழங்குடியினர் வலியுறுத்தல்

3 சதவீத இடஒதுக்கீடு: பழங்குடியினர் வலியுறுத்தல்

சென்னை:'ஆந்திரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ளதை போல, தமிழகத்திலும் பழங்குடியினருக்கு என தனித்துறை ஏற்படுத்துவதுடன், இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என, விளிம்புநிலை பழங்குடி நல கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. பழங்குடியின மக்கள், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் பயனடைய, ஆந்திரா, ஜார்க்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாநில அரசுகள், பழங்குடியினருக்கு தனித்துறையை ஏற்படுத்தி உள்ளன. இதேபோல், தமிழகத்திலும் பழங்குடியினருக்கு, தனித்துறையை அரசு ஏற்படுத்த வேண்டும் என, விளிம்பு நிலை பழங்குடி நல கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளது. இது குறித்து, அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கூறியதாவது:தமிழகத்தில், 37 வகையான பழங்குடியினர் உள்ளனர். இவர்களில், 80 சதவீதம் பேர், பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம் பழங்குடியினர் துறை தனியாக இல்லாதது தான். ஆந்திராவில் பழங்குடியின மக்கள் தொகை அடிப்படையில், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த நடைமுறை இல்லை.தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என, ஒரே துறையின் கீழ், இரு வகுப்பினரையும் அடக்குவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் துறை மட்டுமே ஒன்றாக உள்ளது. இட ஒதுக்கீட்டில் மிகப்பெரிய பாகுபாடு உள்ளது. எனவே, மற்ற மாநிலங்களில் உள்ளதை போல், தமிழகத்திலும் பழங்குடியினருக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில், இடஒதுக்கீட்டை, 3 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை