உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகா கும்பமேளாவுக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மகா கும்பமேளாவுக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகா கும்பமேளாவை முன்னிட்டு, சென்னை - லக்னோ உட்பட மூன்று சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வே அறிக்கை:கன்னியாகுமரியில் இருந்து, வரும் ஜனவரி 6, 20ம் தேதிகளில் இரவு 8:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 4வது நாள் அதிகாலை 1:30 மணிக்கு, பீஹார் மாநிலம், கயா செல்லும்.மறுமார்க்கமாக, கயாவில் இருந்து, ஜன., 9, 23ம் தேதிகளில் இரவு 11:55க்கு புறப்பட்டு, அடுத்த நான்காவது நாள் அதிகாலை 3:50 மணிக்கு கன்னியாகுமரி வரும்கன்னியாகுமரியில் இருந்து, பிப்., 17ம் தேதி இரவு 8:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் இரவு 9:50 மணிக்கு உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் செல்லும். மறுமார்க்கமாக பனாரஸில் இருந்து, பிப்., 20ம் தேதி மாலை 6:05க்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாள் இரவு 9:00 மணிக்கு கன்னியாகுமரி வரும்.இது, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும்.சென்னை சென்ட்ரலில் இருந்து, ஜன., 8, 15, 22, பிப்., 5, 19, 26ம் தேதிகளில் மதியம் 2:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள மோமதி நகருக்கு, அடுத்த மூன்றாவது நாள் மதியம் 2:15க்கு செல்லும்.மறுமார்க்கமாக, மோமதி நகரில் இருந்து, ஜன., 11, 18, 25, பிப்., 8, 22, மார்ச் 1ம் தேதிகளில் அதிகாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:55க்கு சென்னை சென்ட்ரல் வரும்.இன்று காலை 8:00 மணிக்கு டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கிஜன்
டிச 22, 2024 06:26

இந்த கு.மேளாவிற்கும் ...தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் ....


Prasanna Krishnan R
டிச 22, 2024 07:17

உங்களுக்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்?


Barakat Ali
டிச 22, 2024 08:37

சனாதனத்தை ஒழிக்க கிறிஸ்தவ இளவரசர் அங்கே போவாரா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 22, 2024 10:11

மூர்க்க வந்தேறிக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் ????


Ganapathy
டிச 22, 2024 11:58

ஓங்கோல் திருடனுக்கு இங்கு என்ன வேலை? கேரளா இங்க மருத்துவகழிவை ஏன் கொட்டணும்? கேரளா நமது மாநில எல்லைகளை மாற்றுகிறது என்பதாவது உங்க தொளபதிக்கு தெரியுமா? இங்க மக்களிடம் வரி வாங்கும் திருட்டுத்திராவிடிய அரசு எப்பவும் மத்திய கடன் கேட்பதேன்? ஏன் இன்றுவரை ரயில்வே திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்து கொடுக்கலை? கர்நாடகம் இதில் நம்மைவிட ஆர்வமாக இருப்பதாவது உன்னோட தொளபதிக்கு தெரியுமா?கடைசியாக ஓங்கோல் திருட்டு குடும்பம் தமிழனை ஆள்வதேன்?


Kasimani Baskaran
டிச 22, 2024 06:10

சிறப்பு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை