உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாரியத்தில் 3 இணையதளம் துவக்கம்

மின் வாரியத்தில் 3 இணையதளம் துவக்கம்

சென்னை : தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான தமிழக பசுமை எரிசக்தி கழகம், சூரியசக்தி, காற்றாலை உள்ளிட்ட பசுமை மின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இந்நிறுவனத்தின், www.tngecl.org இணையதளத்தை, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். இது, பசுமை மின்சாரம் குறித்த தகவல்களை வழங்குவதுடன், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையத்திற்கு விண்ணப்பிக்கும் வசதியையும் கொண்டுள்ளது.மேலும், மின் வாரியத்திற்கும், ஒப்பந்த நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகளை சீரமைக்க, vendor.tnebltd.org/appvendor/ என்ற இணையதளம் மற்றும் பணியாளர்களின் மனிதவள தேவைகளை நிர்வகிக்கும் இணையதளத்தையும், சிவசங்கர் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ