உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடைகள் செலவுக்கு ரூ.300 கோடி

ரேஷன் கடைகள் செலவுக்கு ரூ.300 கோடி

சென்னை:கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. இந்த கடைகளுக்கு வாடகை உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது.ஆனால், இந்த மானியம் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படாததால், சங்கங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, நிலுவையில் உள்ள மானியத்தை விடுவிக்குமாறு அரசுக்கு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.தற்போது, நடப்பு நிதியாண்டிற்கான மானியத்தில், 300 கோடி ரூபாயை விடுவித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை, மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, மாவட்ட வாரியாக சங்கங்களுக்கு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை