உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலக நன்மைக்கான 300 நாள் ரிக்வேத பாராயணம் நிறைவு

உலக நன்மைக்கான 300 நாள் ரிக்வேத பாராயணம் நிறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு காஞ்சி காமகோடி பீடம் வாயிலாக 300 நாட்கள் நடத்தப்பட்ட ரிக்வேத பாராயணம் நிறைவு பெற்றது. ராமஜென்ம பூமியான அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டை கடந்த ஜனவரி 22ல் நடந்தது. இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் காஞ்சி காமகோடி பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கட்டளைப்படி 'கோதண்டபாணிக்கு தண்ட சமர்ப்பணம்' என்ற பெயரில் உலக நன்மைக்காக ரிக்வேத பாராயணம் துவக்கப்பட்டது.திருவானைக்காவல், ஜகத்குரு வித்யாஸ்தானம் மற்றும் முத்தரசநல்லுார் தாலுகா பழூரில் அமைந்துள்ள ராமச்சந்திர அய்யர் நினைவு வேத வேதாந்த பாடசாலையில் பயின்று வரும் மாணவர்களின் வாயிலாக துவங்கி 300 நாட்களில் பூர்த்தி செய்யப்பட்டது.தற்போது கர்நாடக மாநிலம் சுல்லியா கிராமத்தில் உள்ள பரத்வாஜ ஆசிரமத்திற்கு காஞ்சி மடாதிபதி விஜயம் செய்துள்ளார். அவர் தண்டக்கிரம வேத பாராயணத்தை அர்ப்பணிப்புடன் நிழ்த்திய மாணவர்களுக்கு 'விக்ருதிஜ்ஞ' எனும் உயரிய பட்டத்தை வழங்கி பாராட்டினார்.மேலும் மாணவர்களுக்கும், அவர்களது ஆசான்களான சுப்ரமண்ய, நீலகண்ட, மணிகண்ட கனபாடிகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

हरिः व्योम
நவ 22, 2024 16:53

தீமையை ஒழி. தானாகவே நன்மை தேடி வரும்


Chess Player
நவ 22, 2024 09:39

கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனதும், வழக்கமான சமய வகுப்புகள், சமய சொற்பொழிவுகள், வேதபாராயணங்கள், இந்த முக்கியத்துவத்தை நம் குழந்தைகளுக்கு விளக்கிச் சாப்பிட வேண்டும் என்றால், இந்த மதமாற்ற வணிகக் குழுக்கள் பணம் கொடுத்து மதம் மாறிக் கொண்டே இருக்கும்.


pmsamy
நவ 22, 2024 07:06

??????


அப்பாவி
நவ 22, 2024 07:05

உலகத்துக்கு நன்மை எப்போ வரும்?


Neutrallite
நவ 22, 2024 11:48

சில அடப்பாவிகள் உள்ளனர். அவர்கள் சென்றதும் வரும்.


हरिः व्योम
நவ 22, 2024 16:54

தீமை ஒழிந்தால் நன்மை தானாகவே தேடி வரும்


புதிய வீடியோ