உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போட்டி தேர்வில் பாஸாகியும் வேலை தராததால் ஆத்திரம்: குடும்பத்துடன் போராட 3,000 ஆசிரியர்கள் முடிவு

போட்டி தேர்வில் பாஸாகியும் வேலை தராததால் ஆத்திரம்: குடும்பத்துடன் போராட 3,000 ஆசிரியர்கள் முடிவு

சென்னை: போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று எட்டு மாதங்களாகியும், பணி நியமனம் இல்லாதாதால், வரும் 21ம் தேதி, குடும்பத்துடன் போராட்டம் நடத்த பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2012, 2013, 2019ம் ஆண்டுகளில், ஆசிரியர் தேர்வாணையம் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கிடையில், 2018ல், தகுதி தேர்வு தேர்ச்சி மட்டும் போதாது, நியமன தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என, அ.தி.மு.க., அரசு அரசாணை வெளியிட்டது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க, நியமன தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியதுடன், தங்கள் ஆட்சி அமைந்தால், நியமன தேர்வை ரத்து செய்து, அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்று, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.ஆனால், ஆட்சிக்கு வந்த பின், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம் இருப்பதால், நியமன தேர்வு நடத்துவதாகக் கூறி, 2023 அக்., 25ல், அறிவிப்பு வெளியிட்டு, 40,000 ஆசிரியர்களுக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி, 4ல் நியமன தேர்வை தற்போதைய அரசு நடத்தியது. அதில், தேர்வானோருக்கு, மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. ஜூலையில் உத்தேச மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு, 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.உத்தேச தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு எட்டு மாதங்களாகியும், இதுவரை கலந்தாய்வோ, பணி நியமனமோ வழங்க வில்லை. எனவே, தேர்வானவர்கள் பணி நியமனத்தை வலியுறுத்தி, போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, கடலுாரை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் பார்த்தி கூறியதாவது:போட்டி தேர்வு எழுதியவர்களில், 3,192 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நவம்பருக்குள் பணி ஆணை வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை கலந்தாய்வும் நடத்தப்படவில்லை, பணியாணையும் வழங்கவில்லை. கடந்த, 10 ஆண்டுகளாக பணி நியமனம் இல்லாததாதல், எங்களில் பெரும்பாலானோர், 50 - 55 வயதை கடந்து விட்டனர்.அரசு பணியை எதிர்பார்த்து, ஒவ்வொரு தேர்வாக எழுதி தேர்ச்சி பெற்றோம். அரசு உரிய பதில் அளிக்காததால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதனால், வரும் 21ம் தேதி, எங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன், சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S.V.Srinivasan
பிப் 17, 2025 10:50

கேட்டா ஒன்றிய அரசு நிதி தரவில்லை . ஆகையால் ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்று திராவிட மாடல் முக்கிய மந்திரி ஒப்பாரி வைப்பாறு. அதுக்கு மேல ஒன்னும் எதிர்பார்க்க முடியாது.


தாமரை மலர்கிறது
பிப் 17, 2025 08:15

அரசு ஊழியர்களை வெறும் கான்ட்ராக்ட்டில் மட்டுமே எடுக்க வேண்டும். அதிக சம்பளம் அரசால் தரமுடியாது. மக்கள் வேலைவாய்ப்பை தனியாரிடம் தான் தேடவேண்டும். அரசை நம்பி வாழக்கூடாது.


Ray
பிப் 17, 2025 07:50

கல்லூரி பட்டம் பெற்றவர்களுக்கெல்லாம் வேலை போட்டு தரவேண்டும்னு சொன்னாலும் சொல்வாங்க ஆள் நிறைய இருக்கும் போது அதிலிருந்து வடிகட்ட வேண்டியதாகிறது இது இயற்கை நியதி


Kasimani Baskaran
பிப் 17, 2025 07:19

செபா போன்ற சக்திமிக்க தரகர்களை நாடினால் வேலை கிடைக்கும்.


நிக்கோல்தாம்சன்
பிப் 17, 2025 06:08

ஓட்டுபோட்டதோடு உங்க வேலை முடிந்தது ,500 இல் இதுவும் ஒன்று என்பது கூட புரியாம


Rajarajan
பிப் 17, 2025 05:56

தமிழக அரசின் சம்பளம் பெறுபவர்களின் வாரிசுகள், எந்த பள்ளிகளில் பயில்கின்றனர் என, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் தெரியும்.


J.V. Iyer
பிப் 17, 2025 04:21

திருடனைப்பார்த்து ராஜமுழி வேணும்னு கேட்டா எப்படி? இவர்களை நம்பி ஓட்டுப்போட்டு.. கார்மம்யா.. அனுபவி ராஜா.. அனுபவி. இவர்களுக்கு வோட்டு போட்டால் வேறு என்ன கிடைக்கும்? நல்ல கட்சி பாஜகவே நல்லாட்சியை கொடுக்கமுடியும். கழகம் என்று முடியும் எந்த கட்சிகளும் இப்படித்தான்.


ram
பிப் 17, 2025 04:20

பணம் கொடுத்தாத்தான் எந்த வேலையும் நடக்கும். ஓட்டு போட பணம் வாங்கினோம் இல்லையா... அதை எப்படி அவங்க வட்டியோட வசூல் பண்றது.. கொஞ்சமாவது யோசிங்க.. எவனாவது சும்மா பணம் தருவானா... உனக்கு ஒருத்தனுக்கு மட்டும் இல்லே.. பல கோடி பேருக்கு கொடுக்குறான்.. ஒருத்தருக்கு ஒரு ரூபாய் கொடுத்தாளும் அவன் பல கோடி கொடுக்கனும்.. இதெல்லாம் எப்படி வட்டியுடன் வசூல் பன்றதாம்.. இனியாவது யோசிங்க..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை