உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு 21ல் திருமணம்: புத்தாடை வழங்கல்

கோவில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு 21ல் திருமணம்: புத்தாடை வழங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பொருளாதாரத்தில் பின்தங்கிய, 700 ஜோடிகளுக்கு, கோவில்கள் சார்பில், நான்கு கிராம் தங்கத்தாலி உட்பட, 60,000 ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி, திருமணம் நடத்தி வைக்கப்படும்' என, சட்டசபையில், அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அரசு அறிவித்தது.முதற்கட்டமாக, சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் வரும், 21ம் தேதி, திருவான்மியூரில், 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் மணமக்களுக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று, பட்டு வேட்டி, சட்டை, துண்டு மற்றும் பட்டு புடவைகளை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார்.பின், அளித்த பேட்டி:கோவில்கள் சார்பில், வரும் 21ம் தேதி, சென்னை திருவான்மியூரில், 31 ஜோடிகளுக்கு திருமணத்தை, முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைக்க உள்ளார். அதேநாளில், மாநிலம் முழுதும், 304 ஜோடிகளுக்கு திருமணம் நடக்க உள்ளது.மாதந்தோறும் பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடத்தும் திட்டம், 17 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வடலுாரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை, இரண்டு பகுதிகளாக பிரித்து, ஒரு பகுதியில் கட்டுமான பணிகள் தொடரலாம் எனவும், அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிடவும், நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அங்கு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.சிதம்பரம் நடராஜர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பாக, நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்து, ஆய்வு செய்ய வெளிமாநில கலெக்டரை நியமித்திருக்கிறது. திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட ரீல்ஸ் பிரச்சனை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு படி செயல்படுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

R.Natatarajan
அக் 20, 2024 18:59

From whos money the marriage is conducted


RAMESH
அக் 20, 2024 06:08

கடவுள் இல்லை என்று கூறும் நபர்கள் கடவுள் பெயரை சொல்லி.... திராவிட கொத்தடிமை மாடல்


Ramesh Sargam
அக் 19, 2024 19:27

ஜோடிகளுக்கு திருமணம். கோடிகளில் கொள்ளை. திமுகவின் கொள்கை.


Gopal
அக் 19, 2024 17:24

ஜோடிகளுக்கு கல்யாணம் பண்ணிவைக்கவா கோவில் இருக்கு? இதற்க்கு கோவில் சொத்து உபயோக படுத்தப்பட்டால் அது அராஜகம்.


Rasheel
அக் 19, 2024 12:57

கிரிப்டோகளின் வாழ்க்கையில் கொண்டாட்டம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 19, 2024 12:20

சாதி, மத சார்பில்லாத அரசு கோவில்களின் வருமானத்தில் இலவச திருமணம், புத்தாடை வழங்கல் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறதே ........ இவர்களுக்கு வெட்கம் என்பதே இருக்காதா ????


ram
அக் 19, 2024 11:36

என்ன வாங்குபவர் அனைவரும் கிரிப்டோஸ் இருப்பார்கள்


T.sthivinayagam
அக் 19, 2024 10:06

பல கோவில்களில் ஐம்பதுக்கும் மேலான பிராமண குருக்கள்கல் விதியை மிறி பணிபுரிவதாக செய்திகள் வருகின்றன அறநிலத்துறை நடவடிக்கை எடுத்து இந்து பக்தர்களின் காணிக்கையை காக்கவேண்டும்


ஆரூர் ரங்
அக் 19, 2024 11:04

மதசார்பற்ற அரசுக்கு ஆலய விதிகளை ஏற்படுத்தும் அதிகாரமில்லை. வெளியேற்றப்பட்ட வேண்டியது .....


hari
அக் 19, 2024 12:15

டாஸ்மாக்கில் கூடுதல் கவுண்டர்கள் திறப்பது உங்களுக்குத்தான்


Indhuindian
அக் 19, 2024 10:02

கடை தேங்காயை எடுத்து வஷி பிள்ளையாருக்கு உடைக்கறதுங்கறது இது தானா? பக்தர்கள் கோயிலுக்காக கொடுக்கும் காணிக்கை மற்றும் நீல புலன்கள் ஏதுவாக இருந்தாலும் அதை ஆணடவனுக்கு அர்பணிக்கப்படுகிறது அதை கோயிலுக்காகதான் -புராணமைப்பு, தினசரி பூஜைகள், அங்கு வேலை செய்யும் பூசாரி உட்பட உள்ள சிப்பந்திகளுக்கு சம்பளம் அப்படிதான் செலவு செய்ய வேண்டும் இப்படி கல்யாணம் அது போன்றவற்றுக்கு உபயோகப்படுத்திடுவது தவறானது நீதிமன்றம் தானாக இதை எதுத்தது இந்த மாதிரியான செயல்களுக்கு உபயோகப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்


Kanns
அக் 19, 2024 09:31

Recover Entire Costs of All Extravagant Expense-Freebies from Ruling Parties. MostBeneficiary will be from Ruling-Allnce Parties


முக்கிய வீடியோ