ரயில்வேயில் புதிதாக 32,438 பேருக்கு வேலை
ரயில்வேயில், பல்வேறு பிரிவுகளில் 2 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. மெக்கானிக், பாயின்ட் மேன், டிராக்மேன் பிரிவுகளில், கடந்த சில ஆண்டுகளாக புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், பாதுகாப்பு அம்சங்களில் பாதிப்பு ஏற்படும் என, ரயில்வே தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், கடைநிலை ஊழியர்கள் பிரிவில், 32,438 பணியிடங்களை நிரப்ப, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதிகபட்சமாக டிராக் பராமரிப்பாளர் - 13,187, பாயின்ட்ஸ்மேன் - 5,058, மெக்கானிக்கல் உதவியாளர் - 3,077 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.டி.ஆர்.இ.யு., ரயில்வே தொழிற்சங்க முன்னாள் தலைவர் மனோகரன் கூறியதாவது: ரயில்வேயில் கடைநிலை ஊழியர்கள் பிரிவில் தான், அதிகளவில் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. ஊழியர்கள் விடுப்பு எடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. தற்போது, வாரியம் அனுமதித்துள்ள நிலையில், இனியும் தாமதம் இன்றி, புதிய பணியாளர்களை விரைந்து நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.