உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் வேலையில் சேர 3,274 பேருக்கு வாய்ப்பு ; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் வேலையில் சேர 3,274 பேருக்கு வாய்ப்பு ; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மாநகர், சென்னை, கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, நெல்லை ஆகிய 8 போக்குவரத்து கழகங்களில், டிரைவர், கன்டக்டர் உள்பட 3,274 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தத் தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை http://arasubus.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வயது குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் 45 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும் மற்றும் இதர வகுப்பினர் 55 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.முக்கிய தகுதிகனரக வாகன ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்ச 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவி சான்று, பொதுப்பணி வில்லை மற்றும் நடத்துநர் உரிமம் 2025ம் ஆண்டு ஜன.,1க்கு முன்பாக பெற்றிருக்க வேண்டும். உயரம் மற்றும் எடைஉயரம் குறைந்தபட்சம் 160 செ.மீட்டரும், எடை குறைந்தபட்சம் 50 கிலோ கிராம் இருக்க வேண்டும். உடல் தகுதி தெளிவான குறைபாடுகளற்ற கண்பார்வை பெற்றிருத்தல் வேண்டும். எவ்விதமான உடல் அங்க குறைபாடுகள் அற்றவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பக்கட்டணம்எஸ்.சி.,/ எஸ்.டி ரூ.590 கட்டணம் (18% ஜி.எஸ்.,டி உள்பட) கட்டணமாகவும், இதர பிரிவினர் ரூ.1,180 (18% ஜி.எஸ்.,டி உள்பட)கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

c.mohanraj raj
மார் 20, 2025 15:20

ஏற்கனவே லஞ்சம் வாங்கிக் கொண்டு சேர்த்திருப்பார்கள் இதெல்லாம் ஒரு நாடகம்


M Ramachandran
மார் 20, 2025 12:51

கோபாலபுரம் via செந்தில் பாலாஜி விண்ணப்பிக்கவும். கண்டிப்பாக வேலை நிச்சயம். ஒரு முக்கி முக்கி செய்தி வாழ்நாள் முழுக்க யாரும் சம்பளத்தில் 50% தவனாய்ய்ய கொடுத்து விடவேண்டும்


Ramesh Sargam
மார் 20, 2025 12:42

விண்ணப்பம் ஒரு கண்துடைப்பு நாடகம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சருக்கு ஒரு கவரில் ஒரு சில கட்டுக்கள் காந்தி படம் போட்ட ரூ நோட்டுக்களை கொடுத்தால் வேலை நிச்சயம். உனக்கு வாகனமே ஓட்டத்தெரியாவிட்டாலும் ஓட்டுநர் வேலை நிச்சயம். கணக்கே தெரியாவிட்டாலும் நடத்துனர் வேலை நிச்சயம்.


rasaa
மார் 20, 2025 12:24

யாரை எப்படி அணுகவேண்டும்?


Muralidharan S
மார் 20, 2025 12:19

பழைய ஓட்டை, உடைசல் பேரீச்சம்பழத்திற்கு எடைக்கு போட வேண்டியதை ஓட்ட ஒரு வாய்ப்பு.. வேண்டுவோர், சீக்கிரமா ஜாமீனில் இருப்பவரை போய்ப்பாருங்கள்.


thangavel
மார் 20, 2025 12:14

போறதுக்கு முன்னாடி அடிச்சு விட்டுட்டு போகிறது. புதுசா வரவங்க சம்பளம் போட காசு இல்லாம தட்டு தடுமாறி செட்டில் செய்வான் அதுவும் பயங்கர கெட்ட பெயரோட.. விடியல் அடுத்த 5 வருஷம் எல்லோருக்கும் சம்பளம் போடு என்று போராட்டம் செஞ்சு மறுபடியும் ஆட்சிக்கு வந்துரும்.... ஏமாகாதங்கங்க...!!!!


KavikumarRam
மார் 20, 2025 11:55

அணில் பாலாஜிய போய் பாருங்கப்பா. சிறப்பா செஞ்சு விடுவாரு.


Ray
மார் 20, 2025 11:52

என்னாங்க இப்டி எல்லாம் கணினி மயம்னு பண புழக்கத்துக்கு வேலையில்லாம பண்ணிட்டா அண்ணாமலை / எடப்பாடி பொழப்பு என்னாறது?


புதிய வீடியோ