உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடைகளில் 3,280 காலிப்பணியிடங்கள் ; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு

ரேஷன் கடைகளில் 3,280 காலிப்பணியிடங்கள் ; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள 3,280 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்ககான (packers) 3,280 காலிப் பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்கள்அரியலூர் - 34 செங்கல்பட்டு - 184 சென்னை - 348 கோவை - 199கடலூர் - 152தர்மபுரி - 58 திண்டுக்கல் - 63ஈரோடு - 99கள்ளக்குறிச்சி - 70காஞ்சிபுரம் - 51 கன்னியாகுமரி - 41 கரூர் - 73 கிருஷ்ணகிரி - 117 மதுரை - 106மயிலாடுதுறை - 45நாகை - 19நாமக்கல் - 49நீலகிரி - 53பெரம்பலூர் - 31புதுக்கோட்டை - 52ராமநாதபுரம் - 44சேலம் - 162சிவகங்கை - 36தென்காசி - 51தஞ்சை - 114தேனி - 49திருப்பத்தூர் - 67திருவாரூர் - 33தூத்துக்குடி - 82நெல்லை - 80திருப்பூர் - 135திருவள்ளூர் - 109திருவண்ணாமலை - 120திருச்சி - 129வேலூர் - 73விழுப்புரம் - 49விருதுநகர் - 71இந்தப் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 7ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.இந்தத் தேர்வுக்கு நடைமுறையில் உள்ள தமிழகம் அரசுப் பணியாளர் தேர்வுக்குப் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறை ஒட்டுமொத்த நியமனத்திற்கும் பின்பற்றப்படும்.சம்பள விகிதம் மற்றும் இதரப்படிகள் மேற்குறிப்பிட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர் பணிநிலை குறித்த சிறப்பு துணை விதிகளுக்குட்பட்டு அமையும். பணியிடங்களுக்கான தேர்வு குறித்து ஏதேனும் முறையீடு செய்வதாக இருந்தால், இத்தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 90 நாட்களுக்குள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் உரிய காரணங்களுடன் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். அதன் பின் பெறப்படும் மேல்முறையீடுகள் ஏற்கப்படாது.மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைபாடு தாங்கள் தேர்வு செய்யப்படும் பதவிகளுக்குரிய பொறுப்புகளை முழுத்திறனுடன் நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்காது என்பதற்கான சான்றிதழை மருத்துவக் குழுவிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பளம்

விற்பனையாளர் : தொகுப்பு ஊதியம் ரூ.6,250, நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரைகட்டுநர்: தொகுப்பு ஊதியம் ரூ.5,550, நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.7,800 முதல் ரூ.26,000 வரைவயது உச்சவரம்புவிண்ணப்பதாரர்கள் 1.07.24 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லைஇதர வகுப்பினர் (OC) - 32 வயதுவிதவைகள் - வயது வரம்பு இல்லைஓ.சி.,யைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் - 50 வயதுஓ.சி.,யைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் - 42 வயது

கல்வித்தகுதி

விற்பனையாளர் - பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வி தகுதிகட்டுநர் - 10ம் வகுப்பு தேர்ச்சிவிண்ணப்பிக்கும் முறை விண்ணப்பதாரரின் போட்டோ - 50 KPக்கு மிகாமல் இருக்க வேண்டும் (Jpeg or Jpg Format)விண்ணப்பதாரரின் கையெழுத்து - 50 KPக்கு மிகாமல் இருக்க வேண்டும் (Jpeg or Jpg Format)விண்ணப்பதாரரின் சாதிச் சான்றிதழ் - 200 KPக்கு மிகாமல் (PDF File)கல்வி தகுதிக்கான சான்றிதழ் - 200 KPக்கு மிகாமல் (PDF File)ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை- 200 KPக்கு மிகாமல் (PDF File)மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் - 200 KPக்கு மிகாமல் (PDF File)ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர் அதற்கான சான்றிதழ் - 200 KPக்கு மிகாமல் (PDF File)

விண்ணப்பக்கட்டணம்

விற்பனையாளர் விண்ணப்பக்கட்டணம் ரூ.150, கட்டுநர் விண்ணப்பக் கட்டணம் ரூ.100.ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், 3ம் பாலினத்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்குவிண்ணப்பக்கட்டண விலக்கு பெறும் மாற்றுத்திறனாளிகள், சமூக நலத்துறை அலுவலரிடம் இருந்து சான்றிதழும், மருத்துவ சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்முன்னாள் ராணுவத்தினரைப் பொறுத்தவரையில் முதல் 2 முறை மட்டுமே கட்டணம் செலுத்தத் தேவையில்லைவிண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mohan
அக் 14, 2024 10:24

இதுல எத்தனை கொள்ளை அடிக்க போறானுகளோ ...விண்ணப்பம் வித்தா அதுல ஒரு காசு, போஸ்டிங் போடுறதுல ஒரு காசு நல்லா கல்லா காட்டீரலாம் இது எல்லாம் ஒரு படிப்பா இன்ஜினியரிங் முடிச்சுவனுக்கே வேலை இல்ல இதுல ந்த தகுதி வேற விளங்குமா கோடி கணக்கான விண்ணப்பம் வரும்


R.RAMACHANDRAN
அக் 14, 2024 07:49

ரேஷன் கடை என்பது அரசாங்கத்தின் திட்டத்தின் கீழான கதையாகும்.அவற்றை கூட்டுறவு சங்கங்களை நடத்தவிட்டு கொத்தடிமைகளாக நடத்தும் விதத்தில் அரசாங்கம் கூட்டுறவு சங்கங்களில் பணி புரியும் கடைநிலை ஊழியர்களாக ஏவலர் மற்றும் காவலருக்கு அளிக்கும் சம்பளத்தில் பாதியை நிர்ணயம் செய்து மானியம் வழங்கி சுரண்டி வருகிறது.அவ்வகையில் 1990 முதல் இது நாள் வரை ரூபாய் 700 கோடி அளவிற்கு சுரண்டியுள்ளது.இதற்கு நீதிபதிகளும் உடந்தை.மூட்டை சரக்குகளை எடை போடாமல் வழங்கி விட்டு எடை போட்டு வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து மொத்த விநியோகத்தில் 10 சதவிகிதம் வரை கொள்ளை அடிப்பதற்கு ரேஷன் கடை பணியாளர்களிடம் கள்ள சந்தையில் விற்பதாக வெளி சந்தை விலைக்கு அபராதம் விதிப்பதையும் அவர்கள் ஏன் என்ற கேள்வி எழுப்பாமல் செலுத்த வேண்டும். எனவே எதிர் காலம் கேள்விக் குறியாக உள்ள இப்பணியில் சேர்ந்து துன்பப்படுவதை தவிர்க்கவும்.


Kasimani Baskaran
அக் 14, 2024 05:46

ஜாமீன் துறையை கேட்டால் தள்ளவேண்டியதை தள்ளினாள் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று சொல்வார்கள்.


அப்பாவி
அக் 14, 2024 03:23

கூடவே அஞ்சாறு லட்சம் குடுக்கறதுக்கு ரெடியா இருங்கோ... ஒரு வேளை வேலை குடுக்க முடியலேன்னா துட்டை திருப்பி குடுத்துருவாங்க. நல்லவங்க.


புதிய வீடியோ