உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது திமுக தான்": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

"நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது திமுக தான்": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நீட் தேர்வு ஆபத்தை முதலில் முன்னறிவித்து, அதற்கு எதிராக பரப்புரை செய்தது தி.மு.க., தான்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தயாரித்த அறிக்கையை பல்வேறு மொழிகளில் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு ஆபத்தை முதலில் முன்னறிவித்து அதற்கு எதிராக பரப்புரை செய்தது திமுக தான். நீட் தேர்வின் தீமைகளை அனைவருக்கும் புரிய வைக்க ஏ.கே.ராஜன் தலைமையில் தி.மு.க., குழு அமைத்தது. ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

நீட் தேர்வின் தீமைகள்

ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின் படி, நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டசபையில் நிறைவேற்றினோம். ஏ.கே. ராஜன் குழு தயாரித்த அறிக்கையை ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் வெளியிட்டுள்ளோம். நீட் தேர்வு ஏழைகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரானதை அம்பலப்படுத்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வருவதால், நீதிபதி ஏ.கே.ராஜனின் அறிக்கையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். நீட் தேர்வின் தீமைகளை அனைவரும் நன்கு புரிந்து கொள்ள ஆங்கிலம் மற்றும் அனைத்து மொழிகளிலும் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

KRISHNAN R
ஜூன் 12, 2024 14:03

கொண்டுவந்த..புண்ணியவான்.. யாரு


S.V.Srinivasan
ஜூன் 12, 2024 12:46

நீட் தேர்வு என்ன மாணவர்களை படித்து முன்னேற விடமாட்டோம் என்று சொன்ன முதல் ஆளே நீங்கதானே. இதுல என்ன பெருமை வேண்டிக்கிடக்கு. தமிழத்தின் தலையெழுத்து.


shan
ஜூன் 12, 2024 08:29

நீட் கொண்டு வந்ததே திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி இதை ஏன்பா சொல்ல மாட்டேங்கிறேகிறீர்கள் மொள்ளமாரிகள் ஒட்டு போடுற தாலே யாக்கியானம் பேசு ப்பிலே


ThamizhMagan
ஜூன் 11, 2024 22:44

நீட் தேர்வில் தமிழ் மாணவர்கள் வெற்றி பெற தமிழ் நாட்டு பாடத்திட்டங்களை மேம்படுத்த வேண்டுமேயன்றி, அதை எதிர்க்க கூடாது. ஒன்று, செய்வது தவறு, இதில் தான்தான் முதலில் செய்ததாக பெருமை வேறு


S.V.Srinivasan
ஜூன் 12, 2024 12:51

இவர்கிட்ட அந்த மாதிரி நல்ல விஷயங்கள் எதிர்பார்க்க முடியாது. 60 வருஷமா தமிழக மாணவர்களை படித்து முன்னேற விட மாட்டோம்னும் சபதம் ஏற்று ஆட்சி அமைத்தவர்களாயிற்றே. உதாரணம் ஹிந்தி வேண்டாம். அப்போ ஆரம்பிச்சதுதான்.


ellar
ஜூன் 11, 2024 13:56

ஏழை எளியவர்களுக்கு திறமை இருந்தால் மருத்துவ படிப்பு படிக்க வசதி பத்தாது. எனவே அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளை அரசை எடுத்து நடத்திட வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க தமிழக அரசாங்கம் இனிமேல் எந்த அனுமதி வழங்கக்கூடாது.


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஜூன் 11, 2024 12:17

நீட் தேர்வு கொடு வந்ததே திமுக. அந்த பெருமையும் அவர்களுக்கு உண்டு பழனி மாணிக்கம் தான் கொண்டு வந்தார்.


ellar
ஜூன் 11, 2024 13:47

அதேபோல போக்குவரத்து கழகங்களுக்கு சேர சோழன் பாண்டியன் ஆரம்பித்து இறுதியில் தாக்குப் பிடிக்க முடியாமல் அதை நிறுத்தியவர்களும் அதே கட்சி தான்


Sun
ஜூன் 11, 2024 06:21

நீட் தேர்வை கொண்டு வந்த பெருமையும் திமுகவுக்கு தான் உண்டு. தான் கொண்டுவந்ததையே எதிர்ப்பதும் திமுகவால் தான் முடியும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 11, 2024 03:29

பொதுமக்களுக்கு நல்லது நடந்தால் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தானே பிசினெஸ் லாஸ்


நாஞ்சில் நாடோடி
ஜூன் 10, 2024 21:24

வாய்ப்பே இல்லை முதல்வரே...


theruvasagan
ஜூன் 10, 2024 12:06

அந்த நாற்பதையும் பதவி ஏற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மறுகணமே ராஜினாம செய்யச் சொல்லி மத்தி.அரசை நிர்பந்திக்கலாம். நல்லதே நடக்கும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை