உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "அரசியலை தாண்டி தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் தேவை": அண்ணாமலை பேட்டி

"அரசியலை தாண்டி தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் தேவை": அண்ணாமலை பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''முதலீடுகளை ஈர்ப்பதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. அரசியலை தாண்டி தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் தேவை'' என நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறினார்.இது குறித்து அண்ணாமலை கூறியதாவது: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.6.60 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன. ஆனால் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி வரும் என எதிர்பார்த்தோம். சென்னை, செங்கல்பட்ட காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் 34 சதவீதம் உற்பத்தி திறன் உள்ளது. அரசியலை தாண்டி தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் தேவை. முதலீட்டில் தமிழக அரசு இன்னும் அதிக இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். முதலீடுகளை ஈர்ப்பதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9fvmai1l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அம்பானியை பாராட்டும் திமுக.,வினர்

தமிழக அரசியல் தலைவர்கள் முன்பு அதானி, அம்பானியை விமர்ச்சித்து, பா.ஜ.,வுடன் இணைத்து பேசினர். தற்போது அவர்கள் முதலீடு செய்தவுடன் பாராட்டி பேசுகின்றனர். குஜராத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே, ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன. வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் ஊக்கம் தேவை. உ.பி.,யில் முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.33.51 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

5ம் இடத்தில் தமிழகம்

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 5ம் இடத்தில் உள்ளது. தமிழகம் 9 பில்லியன் டாலர் அளவிற்கு மட்டுமே அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் அரசியல் பாதை மாற வேண்டும் என்று என் மண் என் மக்கள் யாத்திரை தெளிவுப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bala
ஜன 09, 2024 17:39

6.60 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது . இதற்க்கு சுலபமான முறையில், அதே சமயம் தமிழ்நாட்டு மக்கள் பயனுறும் வகையிலும், அனுமதி அளிக்க சிஸ்டம் செயல் படுத்த வேண்டும். இங்கு முதலீடு செய்வதால் அம்பானி, அதானி ஆகியோர் . குஜராத்தில் செய்தால் ஊழல் வாதிகள் . என்னடா உங்க திராவிட மாடல் நியாயம்.


R S BALA
ஜன 09, 2024 16:34

எத்தனை கோடி முதலிட ஈர்த்தாலும் மக்கள் பாடு திண்டண்ட்டமதானய்யா இருக்கு..


ஆரூர் ரங்
ஜன 09, 2024 15:07

உ.பி யில் 33 லட்சம் கோடி முதலீடு குவிந்துள்ளது. ஜெய் ஸ்ரீராம்


Paraman
ஜன 09, 2024 14:54

இந்த முதலீட்டார்கள் மாநாடு இந்த திறமையற்ற 21.ம்பக்க திராவிடியா ஊழல் கும்பல் வெறும் ஜல்லியடிக்க பயன்படும் மற்றுமொரு டுபாக்கூர் விளம்பரம் வருகின்ற அணைத்து தொழில் முனைவோருக்கு என்ன கொடுக்கப்போகிறார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக இவர்களால் வெளியிட முடியுமா?? நாங்கள் அவள் தருகிறோம் நீங்கள் உமி கொண்டு வாருங்கள் இருவரும் சேர்ந்து தமிழகத்தை சுரண்டி ஊதி ஊதி தின்னுவோம் என்ற கதை தான் நடக்கும்...இந்த முதலீடுகளால் விளைநிலங்கள் எத்தனை ஆயிரம் ஹெக்டர் அழிக்கப்பட உள்ளது, மாசு கட்டுப்பாடுகள் ,தரவுகள் என்ன, என்ன விதமான மாசுக்கள் அதிகரிக்கும் ஊராட்சி மாநில அரசு என்னவிதமான டுபாக்கூர் இலவசங்களை அவர்களுக்கு அனுமதித்து அதன் மூலம் அந்த டுபாக்கூர் முதலீடுகளில், முதலீடு இல்லாத பங்காளிகளாக உள்ளார்கள் என்பதை ஒரு நடுநிலை அமைப்பு மூலம் ஆய்வு செய்து மக்களுக்கு விரிவான வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றில் மக்கள் மற்றும் சுற்றுப்புற சூழல்களுக்கு, நிலத்தடி தண்ணீர் ஆதாரங்களுக்கு எதிரான எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே இந்த தொழில் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும். இது போன்று அனுமதிக்கப்பட்ட வேதாந்தா காப்பர் ஏன் திடீரென்று ஆட்சியாளர்களுக்கு விரோதமாக போனது ஏன் என்றால் லெக்பீஸ் தாத்தா கோவாலுக்கு பாவாடைகள் போட்ட லெக்பீஸுக்கு சமமாக பொட்டி வேதாந்தாவிடம் இருந்து கிடைக்கவில்லை...அதான் அந்த கலவரம் மூடுவிழா எல்லாம் ...


Raa
ஜன 09, 2024 14:43

அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால்: கொள்ளை அடித்த பணத்தை வெளிநாட்டில் கொண்டு போயி கொட்டாமல், இங்கேயே முதலீடு பண்ண சொல்லிகிறார்.


கனோஜ் ஆங்ரே
ஜன 09, 2024 16:40

ஆரூத்ராவில் கொள்ளை அடிச்ச பணத்தையா.....?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை