உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்" - வானிலை மையம் அறிக்கை

"தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்" - வானிலை மையம் அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் இன்றும் (மார்ச் 05), நாளையும் (மார்ச் 06) வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (மார்ச் 05) முதல் மார்ச் 11ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ