உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரசை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி: செல்வப்பெருந்தகை

காங்கிரசை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி: செல்வப்பெருந்தகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: ''தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்.,கை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி'' என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: தனி நபர்களை தாக்கிப் பேசுவது பா.ஜ.,வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். குறிப்பாக, வடமாநிலங்களில் தனிநபர்களை தாக்கிப் பேசுவது அதிகமாக நடைபெறும். தமிழகத்தில் தற்போது தான் அதனை துவங்கி உள்ளனர். தனிநபர்களைத் தாக்கி பேசுவது மட்டுமல்லாது ஆட்களை வைத்து தாக்கவும் செய்வார்கள். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஆட்சியாளர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அவர் என் மீது தனிநபர் தாக்குதல் நடத்த வேண்டும், அதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 84 )

Gopalan
ஆக 07, 2024 07:16

தனியாக நின்று பாருங்கள் ஒரே ஒரு முறை.. சாயம் வெளுத்து vidum


Gopalan
ஆக 07, 2024 07:13

பட்டியல் ரவுடிகள் இன்னும் கள நிலவரம் புரியமால் உள்ளார்கள் போல.. காங்கிரஸுக்கு என்று ஒரு வாக்கு வங்கி தமிழ்நாட்டில் இல்லவே இல்லை.. ஒரு முறை, ஒரே ஒரு முறை தனியாக நின்று பாருங்கள்.. முட்டாள்களின் சொர்க்கத்தில் vasikkirar


tmranganathan
ஆக 06, 2024 19:34

ரிசெர்வ் பேங்க் peon thaan selva.oru எடுபிடிவேலைக்கார கருப்பு தமிழன். ராகுலின் எடுபிடி பயல். என்ன மூளை இருக்கும்? விட்டுத்தள்ளுங்க. பங்களாதேஷ் போல தமிழகத்தில் நடக்கும்.ஓங்கோலுக்கு ஓடும் கோபாலபுராதான்


murugan
ஆக 06, 2024 13:13

அண்ணாமலை உங்களை ஒரு ரவுடி என்று முத்திரையை பலமாக குத்திவிட்டார். இனி நீங்கள் எப்படி அந்த பெயரில் இருந்து வெளியே வருவீர்கள் ? உங்களைப்பற்றி ஊர் உலகம் எல்லாம் தெரிந்து விட்டது.


Alur Subramaniam
ஆக 05, 2024 20:02

Annamalai is demonstrating his leadership skill, but you lack the capability.


Thirunavukkarasu Sivasubramaniam
ஜூலை 24, 2024 09:33

உங்களின் கட்சியை வலிமைப்படுத்த வெளியிலிருந்து எதாவது செய்தால் தான் உண்டு என்கிறீர்களா? உங்களால் அதை உள்ளிருந்து செய்ய முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?


murugan m
ஜூலை 24, 2024 07:57

மக்களுடன் முதல்வர். திட்ட முகாம் இரண்டு அல்லது மூன்று துறை அலுவலர் மட்டும் கலந்து கொள்கிறார்கள் மேலும் ஒரே நேரத்தில் மாவட்டத்தில் இரண்டு இடத்தில் எந்த அதிகாரிகள் எங்கு செல்வார்கள்?


Gopal Samy
ஜூலை 15, 2024 13:07

வெறுமனே கட்சிக்கு தலைவனாக இருந்தால் போதாது. உண்மையை எதிர்கொள்வதற்கு தைரியம் வேண்டும். அப்போது மட்டுமே கட்சிக்கு தலைவன் என்ற தகுதி கிடைக்கும்.


Narayanan
ஜூலை 15, 2024 11:54

ஆக காங்கிரஸ் வலிமை அடைவதே அடுத்தவர்களாலேதான் என்பதை ஒத்துக்கொள்ள தன்மானம் வேண்டும். இதுவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் இருப்பதே திமுகவினால்தான். இப்போ இவர் கூற்றுப்படி பிஜேபியும் வந்திருக்கிறது என்கிறார். நல்லது . ஆனால் பிஜேபி உங்களை காங்கிரெஸ்ஸை புஷ்வாணமாகத்தான் செய்யும் . மறவாதீர்கள் .


shyamnats
ஜூலை 15, 2024 09:05

திரு அண்ணாமலை கேட்ட கேள்விகளுக்கு, ஆம் இல்லை என்று சரியாக பதில் அளியுங்கள். தங்கள் குற்ற பின்னணி பற்றி தெரிந்து கொள்ள தமிழக கான் கிராஸ் மற்றும் பொது மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை