உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுவெளியில் கிடக்கும் மின்னணு கழிவுகள் தமிழகத்தில் 3.75 லட்சம் டன்

பொதுவெளியில் கிடக்கும் மின்னணு கழிவுகள் தமிழகத்தில் 3.75 லட்சம் டன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் மறுசுழற்சி செய்யப்படாத மின்னணு கழிவுகள், 3 லட்சத்து, 75,570 டன் அளவுக்கு பொதுவெளியில் இருப்பதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவு: மாநில வாரியாக உருவாகும் மின்னணு கழிவுகள், மறுசுழற்சி செய்யும் யூனிட்கள் பற்றிய விபரங்களை தாக்கல் செய்யுமாறு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தோம். ஆனால், தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட எட்டு மாநில விபரங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில், 2024 -- 2025ல் 4 லட்சத்து, 66,578 டன் மின்னணு கழிவுகள் உருவாகியுள்ளன. தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில், 15 மின்னணு கழிவுகள் மறு சுழற்சி யூனிட்கள் உள்ளன. அதன் வாயிலாக, 91,008 டன் மின்னணு கழிவுகள் மறு சுழற்சி செய்யப்பட்டு உள்ளன; 3 லட்சத்து, 75,570 டன் மின்னணு கழிவுகள் பொதுவெளியில் இருப்பதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுதும், 19 மாநிலங்களில், 108 மாவட்டங்களில், 381 மின்னணு கழிவு மறுசுழற்சி மையங்கள் செயல்படுவதாகவும், அதன் வாயிலாக, 33 லட்சத்து, 3,922 டன் மின்னணு கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுவதாகவும் வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்யப்படாத மின்னணு கழிவுகள் அதிக அளவில் பொதுவெளியில் இருப்பதை, அறிக்கை வெளிப்படுத்துகிறது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் உருவாகும் மின்னணு கழிவுகளின் அளவு, மறுசுழற்சி செய்யும் திறன் குறித்து, ஆறு வாரங்களுக்குள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிந்தனை
ஆக 29, 2025 16:08

நமது சுக வாழ்க்கைக்கு விலை நம் சந்ததிகளுக்கு வலி


Vasan
ஆக 29, 2025 10:51

Corporation should keep exclusive bins at ed places for depositing e-waste. A long way to go, though. There are authorised agencies, who are certified to collect e-waste from industries. But no such agency for collecting e-waste from public.


Arul. K
ஆக 29, 2025 06:45

1 டன் காகிதம் செய்வதற்கு 17 மரம் வெட்டவேண்டியுள்ளது. அதனால் அனைவரும் டிஜிட்டலுக்கு மாறுங்கள் அனைத்துநாடுகளும் விளம்பரம் செய்கிறது. ஆனால் மின்னணு கழிவுகள் அதைவிட கொடுமையானது என்பது யாருக்கும் புரிவதில்லை.


V RAMASWAMY
ஆக 29, 2025 09:01

எதுவும் புரிந்து அதற்குத்தக்கவாறு நடந்தால் நாடே சொர்க்க பூமியாகும். ஆனால் படித்தும் மடையர்களாக மிருகங்கள் போல் நடந்துகொள்ளும் மக்களை என்னென்பது? தடையிருந்தும் பொதுவிடங்களில் புகைபிடிப்பது, ஹெல்மெட் இல்லாமல் இருசக்கிர வாகனங்கள் ஓட்டுவது, கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, குப்பை கூளங்கள் கொட்டுவது, நாகரீகமில்லாமல் மூத்தோர்களிடம் மரியாதையில்லாமல் நடந்துகொள்வது கவலையின்றி தொடர்ந்து குற்றங்கள் புரிவது இவையெல்லாம் இத்தகைய மக்கள் மீதும் மெத்தனமாக இருக்கும் அதிகாரிகள் மீதும் வெறுப்பை அதிகரிக்கின்றன. மிக்க கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே குற்றங்கள் ஓரளவுக்கு குறையா வாய்ப்பு.


Artist
ஆக 29, 2025 06:45

ரீல் மன்னர்கள்


Varadarajan Nagarajan
ஆக 29, 2025 05:57

மாசு ஏற்படுத்தும் கழிவுகளை கட்டுப்படுத்தி அவற்றை முறையாக கையாண்டு இயன்ற அளவு மறுசுழற்சி செய்யவேண்டும் என பல சட்டங்ககளையும் விதிகளையும் இயற்றி தொழிற்சாலைகளை கண்காணித்துக்கொண்டிருக்கும் பசுமை தீர்பாயமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பொதுமக்களிடமிருந்து வெளியாகும் மின்னணு கழிவுகளை சேகரித்து முறையாக மறுசுழற்சிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவற்றை செயல்படுத்த மாநில அரசும் போதிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். உதாரணத்திற்கு எல்இடி விளக்குகளும் ரிமோட் கண்ட்ரோல்களும் இல்லாத இடமே இல்லை. அவைகள் பழுதானபிறகு குப்பைகளுடன் வெளியாகின்றன. அவற்றை தனியாக பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்ய போதிய கட்டமைப்பு மாநில மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இல்லை. அதுபோல் மருத்துவ கழிவுகளை கையாள ஏற்படுத்தப்பட்டுள்ள மெட்டமைப்புகளும் த்ருப்திகரமா செயல்படவில்லை. பல சிறிய மருத்துவமனைகளில் இவை முறையாக கையாளப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட துறைகள் முறையாக இவற்றை கண்காணிப்பதும் இல்லை.


Kasimani Baskaran
ஆக 29, 2025 05:27

தாமிரம் - 30%. தங்கம் சாதாரண சில்லுகளில் 0.05%. - 0.1% மெமரி சில்லுகளில். 0.2% அதிவேக மெமரி சில்லுகளில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை