உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

திருச்சி: திருச்சியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.திருச்சி மேல கல்கண்டார் கோட்டை, மூகாம்பிகை நகர், மேகலா தியேட்டர் எதிர்புறம் துணிக்கடை முன்பு அலெக்ஸ் நடத்தி வந்தார். இவருடைய மனைவி விக்டோரியா. இவர் ரயில்வே ஊழியர். இவர்களுக்கு ஆராதனா,9, மற்றும் ஆலியா,3, ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.நேற்று இரவு வீட்டில் கணவன், மனைவி இருவரும் தூக்கு மாட்டிக்கொண்டும் அவரது இரு பெண் பிள்ளைகளுக்கு மருந்து கொடுத்தும் தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லை காரணமாக இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bala
மே 14, 2025 21:25

திருச்சியில் ரயில்வே ஊழியர்கள் அதிகம் கந்து வட்டிக்கு பலியாகிறார்கள். குறிப்பாக ஒரு சில கந்து வட்டி குண்டர்கள் ரயில்வே ஊழியர்களை குறிவைத்து தங்கள் வலையில் சிக்க வைக்கிறார்கள். ஒரு முன்னாள் நடிகரின் கூட்டம் இதில் உடந்தை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை