மேலும் செய்திகள்
ரியல் எஸ்டேட் ஆணைய அமர்வுகள் மாற்றம்
30-Aug-2025
புதுச்சேரி: ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் 1.30 கோடி ரூபாய் மோசடி செய்த 4 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வருகின்ற னர். புதுச்சேரி, நெல்லித்தோப்பை சேர்ந்தவர் பாஸ்கரன், 55; கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரிக்கு வந்தபோது, புதுச்சேரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தாமோதரன் அறிமுகமானார். அப்போது அவர், 'வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும்' என்றார். அதனை நம்பிய பாஸ்கரன், தாமோதரனின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஜானகி, ஆகாஷ், கடலுார் அப்துல் சல்மான் ஆகியோர் வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணையாக 1.30 கோடி ரூபாய் முதலீடு செய்தார். பின்,, தனது முதலீட்டிற்கான லாபத்தை கேட்டபோது, சரியாக பதில் அளிக்காமல் தாமோதரன் அலைக்கழித்து வந்துள்ளார். இதுகுறித்து பாஸ்கரன் சி.பி.சி.ஐ.டி., போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, தாமோதரன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.
30-Aug-2025