உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது

நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், பர்கத் நகர்,வாட்டர் டேங்க் அருகே உள்ள தோப்பில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள், சணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்தது.விசாரணையில், அவர்கள் சின்ன கோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர் நகர் ராயர் மகன் அப்பு (எ) ஜவகர்,26; அய்யனார் கோவில் மேட்டை சேர்ந்த பக்கீர் முகமது மகன் அகமது அசேன்,28; ரகமத் நகர், மீரான் மகன் முகமது ஷெரீப்,25; புதுச்சேரி சாமிப் பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ரவி மகன் குட்டி (எ) சரவணன்,30; எனவும், நான்கு பேரும், நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிகுண்டு வெடிக்கச் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டதும், ரவுடிகளான அப்பு, அசேன், ஷெரீப் ஆகியோர் மீது கொலை வழக்குகளும், சரவணன் மீது அடிதடி வழக்கு இருப்பதும் தெரியவந்தது.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

என்றும் இந்தியன்
ஜூலை 05, 2025 18:29

மிக மிக சிறிய சட்டம் "தவறு கண்டேன் சுட்டேன்" இதைக்கொண்டுவந்தால் எல்லாம் சரியாகிவிடும்


ramesh
ஜூலை 05, 2025 17:29

ஏன் இந்த மத துவேஷம் . எல்லா மதத்திலும் அதிக படியான நல்லவர்களும் சிறிதளவு அயோக்கிய புல்லுருவிகளும் இருக்கிறார்கள் . இதே போல தப்பு செய்யும் ரவுடிகளை முஸ்லீம் நாட்டில் நிறைவேற்றப்படும் தண்டனை போல பொது மக்கள் முன்னிலையில் கல்லெறிந்து தண்டனையை நிறைவேற்றினால் பயம் வரும் இல்லை என்றால் கொரியர் இல் கூட வெடிகுண்டு கிடைக்கும் . கடும் தண்டனை குற்றவாளிகளுக்கு அவசியம்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 05, 2025 16:59

மக்கள் தொகையில் இருபது சதவிகிதம் மட்டும் இருப்பவர்கள் இங்கே நால்வரில் இருவர், அதாவது ஐம்பது சதவிகிதம் ..... நாடு எங்கே போகிறது ?


Bahurudeen Ali Ahamed
ஜூலை 06, 2025 12:40

அயோக்கியத்தனம் யார் செய்தாலும் தண்டனை கொடுக்கப்படவேண்டும் அவன் எந்த சமூகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும்


Kasimani Baskaran
ஜூலை 05, 2025 14:41

மர்மநபர்களுக்கிடையில் சரவணன் என்கிற ஒரு கறுப்பாடு... வெளங்கும்டா


Kumar Kumzi
ஜூலை 05, 2025 11:56

இந்த சிறுத்தை குட்டிகளை விலங்குகள் சரணாலயத்தில் விட்டுவிடுங்கள்


V RAMASWAMY
ஜூலை 05, 2025 11:31

வருடக்கணக்காக காலம் தாழ்த்தாமல், இஸ்லாமிய நாடுகளைப்போல் உடனுக்குடன் தீவிர தண்டனை கொடுத்தால் தான் குற்றங்கள் கொஞ்சமாவது குறைய வாய்ப்பு உண்டு.


அப்பாவி
ஜூலை 05, 2025 11:05

இவிங்க மேலே ஏற்கனவே ஏகபட்ட வழக்குகள் இருக்காம். இருந்தாலும் சுதந்திரமா நாட்டு வெடிகுண்டு தயாரிச்சு பதிவு போடறாங்களாம். போலுசா இது? த்தூ..


Bahurudeen Ali Ahamed
ஜூலை 05, 2025 10:30

விரைவில் பாத்ரூமில் வழுக்கிவிழ வாழ்த்துக்கள்


Keshavan.J
ஜூலை 05, 2025 10:22

என்ன கொடுமை சரவணா இது. ஏன் இந்த மூர்க்கர்களோடு சேர்த்தாய் .


Bahurudeen Ali Ahamed
ஜூலை 05, 2025 15:46

ஓஹ் இந்த சரவணன் அந்த நான்கு பேரோடு சேராமல் இருந்திருந்தால் புனிதராக இருந்திருப்பாரோ? காவாலிப்பசங்க எல்லா சமூகத்திலும் எல்லா ஜாதியிலும்தான் இருக்கிறார்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவன் யாராக வந்தாலும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் அதுவும் கூடிய விரைவில்


சமீபத்திய செய்தி