உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லக்கி பாஸ்கர் மாதிரி ஆகணும்! படம் பார்த்து எஸ்கேப்பான பள்ளி மாணவர்கள்

லக்கி பாஸ்கர் மாதிரி ஆகணும்! படம் பார்த்து எஸ்கேப்பான பள்ளி மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விசாகப்பட்டினம்: துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் பார்த்த 4 மாணவர்கள் அவர் போன்று ஆகவேண்டும் என்று எண்ணி விடுதியில் இருந்து தப்பி ஓடி இருக்கின்றனர்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மஹாராணிபேட்டையில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்களில் சரண் தேஜா, ரகு, கார்த்திக், கிரண்குமார் ஆகிய 4 பேர் பிரபல நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v3g009pf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த படத்தின் தாக்கம் அவர்கள் 4 பேரையும் அதிகம் பாதித்ததாக தெரிகிறது. லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருப்பார். பின்னர் கார், வீடு என சொகுசான மனிதராக மாறி இருப்பார். அவரின் கதாபாத்திரம் 4 பேரையும் வெகுவாக ஈர்க்க, அவரை போல வசதிகளுடன் வாழ எண்ணி உள்ளனர். நாங்களும், கார், வீடு உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறோம் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு விடுதியில் இருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்து உள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

KRISHNAN R
டிச 11, 2024 19:22

நாட்டில் உள்ள அனைத்து அசம்பாவிதமும்... சினிமாவில் புகழ்ந்து கட்டபடுது... கேட்டால் ஒரு அறிவுஜீவி சினிமாவை... சினிமாவா பாருங்க என்று அட்வைஸ் வேற.... எப்படி உருப்படும்


ponssasi
டிச 11, 2024 15:44

சினிமாக்காரர்கள் போல வரவேண்டும் என ஆசைப்பட்டால் சிறைதான் வாழ்க்கை. ஒவ்வொரு தனி மனிதனும் மாறவேண்டும், பிறகு தான் குடும்பம் மாறும். குடும்பங்கள் மாறினால் சினிமா மாறிவிடும். அதன் பின் நடிப்பவனும் மாறிவிடுவான். வெறி சிம்பிள்


PR Makudeswaran
டிச 11, 2024 14:57

திரை உலகினரை பற்றி எதேனும் சொல்லிவிட்டால் ஒரு சிலருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. அது ஒரு மாய பிம்பம் என்று சிறுவர்களுக்கு புரியமோ. இறைவன் தான் புலி வாலை பிடிக்க விடாமல் அருள் செய்ய வேண்டும்.


அப்பாவி
டிச 11, 2024 13:50

எல்லோரும் கனவு காணுங்கன்னு ஒரு பெரியவர் சொன்னாரு.


Barakat Ali
டிச 11, 2024 12:15

மாணவர்களின் வயதோ, படிக்கும் வகுப்போ செய்தியில் குறிப்பிடப்படவில்லை .... துல்ஹர் சல்மான் மட்டுமல்ல, அக்கால தமிழ்ப் படங்களிலும் ஜெய்சங்கர் போன்றோர் இது போன்ற கதையுள்ள படங்களில் நடித்துள்ளனர் ..... வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை என்று குழந்தைகளுக்கு உணர்த்தாத பெற்றோர் பெற்றோரே அல்லர் ....


Perumal Pillai
டிச 11, 2024 12:14

முன் ஜென்மத்தில் எம்ஜியார் ரசிகர்களாக இருந்திருப்பர் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை