உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலித்களுக்கு எதிரான குற்றம் 40 சதவீதம் அதிகரிப்பு; கவர்னர் நேரடி அட்டாக்

தலித்களுக்கு எதிரான குற்றம் 40 சதவீதம் அதிகரிப்பு; கவர்னர் நேரடி அட்டாக்

சென்னை: '' தலித்களுக்கு எதிரான குற்றம் 3 ஆண்டில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது,'' என கவர்னர் ஆர்.என். ரவி கவலை தெரிவித்துள்ளார்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி பேசியதாவது: அமைதியான உலகிற்கு மஹாத்மா காந்தியின் கொள்கைகள் இன்றும் முக்கியமானதாக இருக்கிறது.தமிழகத்தில் சமூக நீதியின் பெயரில் கூச்சல் இருந்தாலும், தலித் சகோதர சகோதரிகளுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்ந்து நடப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. தலித்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும், கற்பழிப்பு வழக்குகளில் தண்டிக்கப்படுவோர் விகிதம், தேசிய சராசரியில் பாதியளவே இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறையால், ஆண்டுதோறும், நாம் ஏராளமான அப்பாவி உயிர்களை இழந்து வருகிறோம். இத்தகைய தனிநபர்கள் தான், சாராய மாபியாக்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனை, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவங்களில் இதனை பார்த்தோம். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

sundarsvpr
அக் 03, 2024 10:55

கரம் சந்த் காந்தியை கொண்டாடுவது சரியா என்பது விமர்சனத்து உரியது. காந்தியின் அணுகுமுறையால் பயன் அடைந்தது ஹிந்துவா அல்லது முஸ்லிமா? உண்மையில் ஹிந்துக்கள் அல்ல. வல்லபாய் பதில் பிரதமர் பதவிக்கு நேரு தேர்ந்துஎடுக்க காரிய கர்த்தா காந்தி. நேரு ஒரு ஹிந்து பிராமின் இல்லை என்று வரலாறு கூறும் உண்மை.


முருகன்
அக் 03, 2024 10:49

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவது இவரின் வேலை என்பதை மக்கள் நன்றாக புரிந்து உள்ளனர்


Kasimani Baskaran
அக் 03, 2024 05:50

வேங்கை வயல் இதற்க்கு சாட்சி.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 02, 2024 23:20

செய்யிறதே ...கூட்டம் தான் என்ற உண்மையையும் சொல்லியிருக்கலாம்.


venugopal s
அக் 02, 2024 22:23

இவர் ஒரு வாய்ச் சவடால் பேர்வழி. ஆளுநர் என்ற பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து கொண்டு தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக எப்போதும் பேசுகிறார்.


சுராகோ
அக் 02, 2024 22:36

தவறு, தி மு க மற்றும் திராவிட மாடலுக்கு எதிராக பேசுபவர்.


Raj S
அக் 02, 2024 23:16

தமிழகத்துல மேடைல பேசற எந்த அரசியல் வ்யாதியாவது பாதுகாப்பு வளையத்துல இல்லனு சொல்லுங்க?? இருக்குற கட்சிய விட்டுட்டு தனி ஆளா வந்தா நாய் கூட மதிக்காது... குறைந்த பட்சம் யாராலயும் சுயேட்சையா நின்னு ஜெயிக்க முடியாது...


hari
அக் 03, 2024 08:20

டாஸ்மாக் மூடிட்டா வேணுகோபால் என்ன பண்ணுவாரோ.. பாவம்...


Ramesh Sargam
அக் 02, 2024 21:39

அண்ணாமலை இல்லாமல் இவர் ஒருவரே திமுகவுக்கு எதிராக பந்து வீசுகிறார். அண்ணாமலை சீக்கிரம் அவர் படிப்பை முடித்து தமிழகம் திரும்பவேண்டும். இவருடன் சேர்ந்து பந்துவீச்சை அதிக வீரியத்துடன் திமுகவின் திருட்டு ஆட்சிக்கு எதிராக வீசி திமுகவை ஆல் அவுட் ஆக்கவேண்டும்.


R Bramananthan
அக் 02, 2024 21:31

கவர்னர் கிராமப்புறங்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கருத்து சொல்கிறார். உண்மை என்னவென்றால் தலித்துகள் கும்பலாக செய்யும் அட்டூழியம் கிராமப்புறங்களில் மிக அதிகம். ஏன் என்று கேள்வி கூட கேட்க முடியாது. கேட்டால் சாதி பெயரை சொல்வதாக பொய் வழக்கு போடுவார்கள். சட்டம் அவர்களுக்கு அரண்.


R Bramananthan
அக் 02, 2024 21:22

மிக சரியாக சொன்னீர்கள். தலித்துகள் கும்பலாக செய்யும் அட்டூழியம் தெரியாமல் கவர்னர் மாட் மாளிகையில் இருந்து கொண்டு கருத்து சொல்கிறார்


Barakat Ali
அக் 02, 2024 20:57

திராவிட மாடல் சாக்கடைக்கு எல்லாமே அரசியல்தான் ....... சமூக நீதி, மதச்சார்பின்மை எல்லாமே ஓட்டுக்காகத்தான் .......


RAMAKRISHNAN NATESAN
அக் 02, 2024 20:47

தெருமா வை சங்கடப்படுத்துறார் கவர்னரு ............


புதிய வீடியோ