உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 40 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 40 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி,: ஊட்டியில், எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியின் எட்டு வயது மகள் அதே பகுதியிலுள்ள பள்ளியில் படித்து வந்தார். அப்பகுதியிலுள்ள கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சிறுமியை அவரது தாத்தா அழைப்பதாக காந்தி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித், 24 கூறி, அருகேயுள்ள சோலைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.தப்பியோடிய அஜித்தை ஊர்மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து, போக்சோ உள்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு ஜன., 18ல் கைது செய்தனர்.இவ்வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது அஜித்திற்கு, 40 ஆண்டுகள் நான்கு மாதம் சிறை தண்டனையும், 15 ஆயிரத்து, 400 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து அஜித் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர் குற்றவாளி

கடந்த, 2022ல் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இவருக்கு 32 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜாமினில் வெளியே வந்தவர் மீண்டும் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Karthik
மார் 29, 2025 14:47

இவனை கொன்றாலும் தப்பில்லை.. ஆனால் சட்டம் அப்படி செய்யாது.. ஏனெனில் இவனிடம் பின்னாளில் மேல் முறையீடு, கீழ் முறையீடு, தண்டனை குறைப்பு, கருணை மனு, ஜாமீன், பரோல், விடுதலை என ஏதோ ஒன்றை சொல்லி கோர்ட் வக்கீலும் வரும்படி பார்க்க வேண்டும் அல்லவா..?? அதனாலதான் அரசு செலவில் 40 ~ 50 வருஷத்துக்கு இலவசமா சோறு, சிக்கன், மட்டன் எல்லாம். 40 வருஷம் தண்டனை முடிந்து அவனோட 65 வயசுல விடுதலையான பிறகு இந்த நாட்டுக்கு எந்த வகையில் பயன்படுவான் யுவர்ஹானர்..??


Haja Kuthubdeen
மார் 29, 2025 10:19

இந்த தண்டனை கொடுத்து ஆயுள் பூரா அரசு சோறு போடுவதை விட அதை அறுத்து விடனும் இவனை போன்றவர்களுக்கு...


Kasimani Baskaran
மார் 29, 2025 07:28

நேரடியாகவே கொன்று இருக்கவேண்டும்.. கோர்ட் தண்டனை கொடுப்பது சந்தேகமே...


நிக்கோல்தாம்சன்
மார் 29, 2025 04:51

அவனின் பகுதியை கட் செய்து அலியாகிடுங்க


Kogulan
மார் 29, 2025 04:40

மறுபடியும் ஜாமினில் வந்து 19 வயது பருவ மங்கையை பலாத்காரம் செய்ய சட்டத்தில் இடமுண்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை