உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலை கடத்தல் வழக்கில் 41 கோப்புகள் மாயம்

சிலை கடத்தல் வழக்கில் 41 கோப்புகள் மாயம்

தமிழகம் முழுதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுவாமி விக்ரஹங்கள், பலரால் கடத்தி விற்கப் படுகின்றன. ஆனால், போலி விக்ரஹங்களை வைத்து திருட்டே நடக்கவில்லை என்பது போல அறநிலையத்துறை நாடகமாடுகிறது. 'சிலை கடத்தல் வழக்கில் 41 கோப்புகள் காணாமல் போனது எப்படி; ஒரே நேரத்தில், 38 போலீஸ் ஸ்டேஷனில் ஆவணங்கள் தீப்பிடித்து எரிந்ததா; முறையாக வழக்குபதியப்பட்டதா; சரியான சாட்சியங்களை சேர்த்து, விசாரிக்கப்பட்டதா' என தமிழக அரசின் தலையில் ஓங்கி கு ட்டு வைத்து, சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் தானாக முன் வந்து விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். இல்லாவிடில், இதுபோன்று ஆவணங்கள் மறைக்கப்பட்டு வழக்குகளின் தன்மை மாறுபட்டு போய்விடும். குற்றவாளிகளை தப்ப வைக்க, தி.மு.க., அரசு துணை போனால், ஹிந்து முன்னணி சட்ட போராட்டம் நடத்தும். -காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !