வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தனியார் பேருந்துகளுக்கு நல்ல கிராக்கி... கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.
ஓட்டை, உடைசல், பழைய இரும்புக்கு பேரீச்சம்பழம்.
சென்னை:போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கை:பொங்கல் பண்டிகை முன்னிட்டு, தமிழகம் முழுதும் 21,904 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக, 22,676 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மொத்தம், 44,580 பஸ்கள் இயக்கபட உள்ளன.சென்னையில் இருந்து நாளை வரை, தினமும் இயக்கக் கூடிய, 2,092 பஸ்களுடன் கூடுதலாக, 5,736 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நான்கு நாட்களும் சேர்த்து, 14,104 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல பிற ஊர்களில் இருந்து நாளை வரை, 7,800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், திருச்சி, மதுரை, துாத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள், சென்னையில் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
தனியார் பேருந்துகளுக்கு நல்ல கிராக்கி... கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.
ஓட்டை, உடைசல், பழைய இரும்புக்கு பேரீச்சம்பழம்.