உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் 47 பேர் கைது: பா.ஜ., கண்டனம்

ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் 47 பேர் கைது: பா.ஜ., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், சென்னை அய்யப்பன்தாங்கல் அரசு பள்ளி மைதானத்தில், நேற்று காலை குருபூஜை மற்றும் ஷாகா பயிற்சி நடத்தினர். அதில், ஆர்.எஸ்.எஸ்., சீருடையில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக கூறி, 47 பேரை கைது செய்னர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0rcvpkuo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பொறுப்பாளர் லோகநாதன் கூறுகையில், ''பள்ளி வளாகத்தில், தொடர்ந்து ஷாகா பயிற்சி செய்து வருகிறோம். ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவையொட்டி, பாரதிய ஜன சங்க நிறுவனர் தீன் தயாள் உபாத்யாய் பிறந்த நாள் சிறப்பு ஷாகா பயிற்சி நடந்தது. இதற்காக, கைது செய்துள்ளனர்,'' என்றார். கைது செய்யப்பட்டோரை சந்திக்க முயன்ற முன்னாள் கவர்னர் தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின், அவர் அளித்த பேட்டியில், ''அமைதியான முறையில் பயிற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. ''அவர்கள், எவ்வித சமூக விரோத செயல்களிலும் ஈடுபடவில்லை. கஞ்சா, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏன்? பலர் ஒன்றிணைந்து உடற்பயிற்சி செய்வதற்கு கூட, போலீஸ் அனுமதி வாங்க வேண்டும் என்பது அராஜகம்,'' என்றார். இந்த கைதை கண்டித்து, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: நாகேந்திரன்: ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை முடக்க துரிதமாக இயங்கும் தி.மு.க., அரசின் இரும்புக்கரம் , குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளை பிடிக்கும்போதும் மட்டும் துருப்பிடித்து இருப்பது ஏன்? தன்னலம் கருதாது தேசநலப் பணிகளில் நுாறாண்டு காலமாக தங்களை இணைத்துக் கொண்டு சேவையாற்றும் தேசியவாதிகளை வழக்குகளாலும், கைதுகளாலும் முடக்கிவிட முடியாது. அண்ணாமலை: கடந்த ஆண்டும் இதேபோல ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு தடை விதிக்க எல்லா வழியிலும் முயற்சித்த தி.மு.க., அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு வைத்தது. வருங்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. அதையும் மீறி, போலீஸ் கைது செய்திருப்பது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளை, தி.மு.க., அரசு தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Barakat Ali
அக் 03, 2025 13:08

ஆர் எஸ் எஸ் தமிழகத்தில் அதிகம் பேசப்பட, புகழப்பட திமுகவும் ஒரு காரணம் .....


ஆசாமி
அக் 03, 2025 12:23

நீதிமன்றத்தை நாடாமல் வெறும் அறிக்கை விட்டுட்டு நகருவது ஏன்


G Mahalingam
அக் 03, 2025 12:00

திமுக ஆட்சி ஒரு கேடுகெட்ட ஆட்சி.


Rathna
அக் 03, 2025 11:28

RSS ஒழுக்கத்தை, சேவையை, பணிவை போதிக்கும் இயக்கம். அதற்கு இங்கே இடமில்லை


visu
அக் 03, 2025 11:17

மத்திய அரசு கருத்து மட்டும் தெரிவித்தால் இப்படித்தான் செய்வாங்க பதிலுக்கு ரெண்டு நடவடிக்கை எடுத்தால் தான் அடங்குவாங்க


C.SRIRAM
அக் 03, 2025 11:06

இருந்தா உனக்கென்ன?


ஆரூர் ரங்
அக் 03, 2025 10:44

அரசுப் பள்ளி, அலுவலகங்களில் மதத்தொழுகை செய்கிறார்கள். அரசு உதவி பெற்று நடக்கும் அன்னிய மதப்பள்ளிகளில் நாட்டுக்கு எதிரான கருத்துக்களை கற்றுத்தருவதாக புகார்கள் எழுந்தன. ஆனால் விடுமுறை நாட்களில் தேச பக்தியை வளர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்தினால் கைது அராஜகம். ஏனெனில் நடப்பது வெள்ளையனே வெளியேறாமல் சுரண்டு என்ற ஆட்சி.


Svs Yaadum oore
அக் 03, 2025 09:54

மற்ற மதத்தினருக்கு உரிய உரிமை ஹிந்துக்களுக்கு கிடையாது ....


Rajah
அக் 03, 2025 08:28

ஆர்.எஸ்.எஸ் இல் இளைஞர்கள் இணைந்திருந்தால் நல்ல ஒழுக்கத்தை கற்றிருப்பார்கள். திராவிடம் போதித்த போலி பகுத்தறிவு சித்தாந்தம் கரூர் மண்ணில் அரங்கேறியிருக்கின்றது. தங்கள் அபிமான நடிகனுக்கு கட்டவுட் வைத்து அதன் மீது ஏறி பால் அபிஷேகம் செய்யும் பழக்கத்தை வேடிக்கை பார்த்தது இந்த திராவிடம். ஏனெனில் திராவிடம் வளர்ந்ததும் அவ்வாறே.


GMM
அக் 03, 2025 08:23

அரசு பள்ளி மைதானம் தலைமை ஆசிரியர் கட்டுபாட்டில் இருக்கும். சொல் அனுமதி இல்லாமல் பயிற்சி செய்து இருக்க முடியாது. மேலும், எந்த அசம்பாவிதம் இல்லாமல் விழா நடத்திய நிர்வாகிகளை போலீஸ் நேரடியாக கைது செய்ய முடியாது. எச்சரிக்கை செய்து அனுப்பலாம். அரசியல் சாசனம் வானளாவிய அதிகாரம் கொடுக்கவில்லை. திராவிடர் எடுத்து செயல் படுத்தி வருகிறார்கள். நீதிமன்றம் தமிழக மாநில நிர்வாகத்தை ஐநா சபை அந்தஸ்தில் வைத்துள்ளது.


முக்கிய வீடியோ