திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளி தாளாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஸ்ரீ குரு வித்யாலயா என்ற தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dl9iimv2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் சுதா மற்றும் அவரது கணவர் வசந்தகுமார்,மாராட்சி, சுதா, செழியன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பள்ளி முதல்வர் விஜயலட்சுமியை போலீசார் தேடி வந்தனர். அவர் இன்று காலை சரண் அடைந்தார். இதற்கிடையே மாணவியின் உறவினர்கள், அதே பள்ளி தாளாளருக்கு சொந்தமான ஸ்ரீ குரு மெட்ரிக்குலேசன் பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் வசந்த குமாரை பிப்.,21 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மற்ற நான்கு பேரும் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு ஜாமின் வழங்கினார்.கண்டனம்
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது; இது கடும் கண்டனத்திற்குரியது.முதல்வர் ஸ்டாலின் அவர்களே, பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வரும் இவ்வேளையில் விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் நீங்கள் இருப்பது ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது. ஒரு 4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள். உங்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி?சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டும்தான் இக்குற்றச்சாட்டில் தொடர்பு உள்ளவர்களா ? மற்றும் வேறு பலர் உள்ளார்களா என முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ள அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.